மிக்ஜாம் புயல் : நிதி உதவி பணம் அனுப்பும் பணியினை ஆட்சியர் ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட மழை வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 135 நியாய விலை கடைகள் மூலமாக 1,31,149 குடும்ப அட்டைதார்களுக்கு ரூ.78,68,94,000/- நிவாரணம் வழங்குதற்காக முன்னதாக நியாய விலை கடை நடத்தும் கூட்டுறவு சங்களுக்கு பணம் அனுப்பிட ஏதுவாக காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின், திருப்பெரும்புதூர் கிளையிலிருந்து வளர்புரம், மாத்தூர் நகர கூட்டுறவு கடன் சங்களுக்கு மற்றும் மணிமங்கலம், படப்பை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
இவ் ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ், கூட்டுறவு துறை மண்டல இணை பதிவாளர் திருமதி.பா.ஜெயஸ்ரீ, திருப்பெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜ.சரவணக்கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.


No comments
Thank you for your comments