காசி தமிழ்ச்சங்க விரைவு ரயில் காஞ்சிபுரம் வந்தது,பொதுமக்கள் அதிகாரிகள் உற்சாக வரவேற்பு
காஞ்சிபுரம், டிச.18:
கன்னியாகுமரியிலிருந்து காஞ்சிபுரம் வழியாக காசிக்கு புதியதாக இயக்கப்படும் சோதனை ரயில் காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையத்துக்கு வந்தது.ரயில் வந்து சேர்ந்ததும் பாஜக காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் கே.எஸ்.பாபு தலைமையில் அக்கட்சியின் துணைத் தலைவர்கள் செந்தில்குமார்,ஜம்போடை சங்கர், மேற்கு மண்டல தலைவர் காஞ்சி.ஜீவானந்தம்,தேசிய மொழிப்பிரிவு மாவட்ட தலைவர் ராஜேஷ் ஆகியோர் ரயிலில் பயணம் செய்தவர்களுக்கு பிஸ்கட் வழங்கினார்கள்.வெண்பூசனிக்காய் சுற்றி உடைத்தும்,பெண்கள் ஆரத்தி எடுத்தும் ரயிலை வரவேற்றனர். ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெற்கு ரயில்வே வணிகப்பிரிவு மூத்த மேலாளர் ஹரிகிருஷ்ணன்,துணைமேலாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் வரவேற்றனர்.தெற்கு ரயில்வே பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் தே.தமிழ்ச்செல்வன், காஞ்சிபுரம் பாரதிதாசன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வரிசையாக நடைமேடையில் நின்று மலர்தூவி வரவேற்றனர்.
காசி செல்லும் இந்த ரயில் குறித்து காஞ்சிபுரத்தில் உள்ள முக்கிய கோயில்களில் விளம்பரப் பதாகைகள் வைக்குமாறு பாஜகட்சியினரும்,விரைவில் ராமேசுவரம் முதல் காசிக்கு ஒரு ரயில் இயக்குமாறு பயணிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் தே.தமிழ்ச்செல்வனும் ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர்.
கன்னியாகுமரியிலிருந்து சோதனை ரயிலாக இயக்கப்பட்டு காசி செல்லும் இந்த ரயிலில் 22 பெட்டிகளில் மொத்தம் 1100 பயணிகள் செல்கின்றனர்.வாரம் தோறும் வியாழக்கிழமை மாலை 5.30க்கு கன்னியாகுமரியிலிருந்து புறப்பட்டு நாளை செவ்வாய்க்கிழமை இரவு 11.30க்கு காசி சென்றடையும் என்றார்.
No comments
Thank you for your comments