ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்தவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு
காஞ்சிபுரம் :
செங்கல்பட்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் கடந்த 1973 ஆம் ஆண்டில் படித்த மாணவர்கள் காஞ்சிபுரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்வுக்கு வா.முத்துப்பெருமாள் தலைமை வகித்தார்.கே.கருணாகரன், என்.ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தமிழாசிரியர் கழகத்தின் முன்னாள் மாநில தேர்வு செயலாளர் வி.ஜீவரெத்தினம் அனைவரையும் வரவேற்று பேசினார்.
விழாவில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச் செல்வி ஆகியோருக்கு சங்கத்தின் சார்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
பின்னர் கவிஞர் டி.பழனிச்சாமி, எழுத்தாளர் ஆ.கிருஷ்ணன்,சமூக நல ஆர்வலர் மு.மூர்த்தி,செஞ்சிலுவைச் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.மாணிக்கம்,காவல் துணை கண்காணிப்பாளர்(ஓய்வு) ஏ.விநாயகம் ஆகியோர் கௌரவிக்கப்பட்டனர்.
விழாவின் நிறைவில் 1973 ஆம் ஆண்டில் செங்கல்பட்டு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்த மாணவர்கள் தங்களது அனுபவங்களை சுவையாக பகிர்ந்து கொண்டனர்.நிறைவாக கி.நாடராஜன் நன்றி கூறினார்.
முன்னதாக காஞ்சிபுரம் கச்சபேசுவரர் கோயிலில் இருந்து மாணவ ஆசிரியர்களின் ஊர்வலம் தொடங்கி விழா நடைபெறும் நாராயண குரு பூஜை மண்டபத்துக்கு வந்து சேர்ந்தது.
படவிளக்கம் : மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.வெற்றிச் செல்விக்கு நினைவுப்பரிசு வழங்கிய தமிழாசிரியர் கழக முன்னாள் மாநில தேர்வுச் செயலாளர் வி.ஜீவரெத்தினம்
No comments
Thank you for your comments