Breaking News

10 கோடி வரை பண மோசடி செய்த தம்பதியினர் போட்டோவுடன் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு..



காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட மண்டி தெரு பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் அருள் மற்றும் சிவசங்கரி வசித்து வருகின்றனர், அருள் தனியார் கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நிலையில் மேலும் கூடுதலாக தம்பதியினர்கள் பைனான்ஸ் என்ற நிதி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அதில் மாதாந்திர ஏல சீட்டு, தள்ளுச்சிட்டு கூடுதலாக நடத்தி வந்தனர்.

என் நிலையில் மாதாந்திர குலுக்கல் சீட்டு என ஆரம்பித்து மாதாந்திரம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் நபரிடம் சீட்டு பணம் அளிக்கும் திட்டம் ஒன்றை தொடங்கி நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக மாதம் ரூ.1000  செலுத்தினால் தங்க நகை அழைக்கப்படும் என ஆசை வார்த்தை கூறி ஒரு திட்டத்தை துவங்கி உள்ளார்.

இந்த தங்க நகை திட்டத்தில் 30 குழு என 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதம் செலுத்தி வந்த நிலையில் தற்போது பணத்தையும் பொருளையும் திருப்பித் தராமல் காலம் கடந்து வந்துள்ளனர்.

3000க்கும் மேற்பட்ட நபர்களுடன் சுமார் 10 கோடி வரை பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்கள் தினந்தோறும் அவ்வப்பொழுது போய் கேட்டு நிலையில் பணத்தை தராமல் ஏமாற்றி வந்தது தெரிந்து இது குறித்து சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்காததால் பாதிக்கப்பட்ட நபர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்நிலையில் பணத்தை இழந்து பாதிக்கப்பட்ட நபர்கள் ஒன்று கூடி காஞ்சிபுரம் முக்கிய நகர் பகுதியில் காந்தி சாலை, மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நுழைவு வாயில் என மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அந்த போஸ்டரில் பணத்தை மோசடி செய்த அருள் மற்றும் சிவசங்கரி தம்பதியினர் புகைப்படத்தையும், அவர்களின் தாய் தந்தை புகைப்படத்தையும் கலர் போஸ்ட் அடித்து   மோசடி செய்த நபர்களிடம் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாதிக்கப்பட்ட மக்களின் பணத்தை மீட்டு தருமாறு மாவட்ட நிர்வாகமே நீதி வழங்குக என கலர் போஸ்டர் அடித்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் நகர் முக்கிய பகுதியில் ஜோசப் அடித்தது மட்டுமல்லாமல் அடித்த போஸ்டர் உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வளாகத்தில் வந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனுவை அழைத்து சென்றனர்.

ஏற்கனவே தமிழக முழுவதும் ஆருத்ரா, ஐஎஃப்எஸ், நிஜாம் போன்ற பல பண மோசடி இழந்த பொதுமக்கள் என்ன செய்வது என்று திக்கி திணறி மன வருத்தத்தில் உள்ள நிலையில் இதுபோன்ற பணமோசடி செய்த தம்பதியினரை கலர் போஸ்டர் அடித்து முக்கிய நகர் பகுதிகளில் ஒட்டி எதிர்ப்பு தெரிவித்தது வரும் நிலையில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகின்றனர்

No comments

Thank you for your comments