காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் தாட்டித்தோப்பு பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரேணுகா பரமேஸ்வரி ஆலய மகா கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடைப்பெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலச்துகொண்டு அம்மனை தரிசித்தனர்.
சின்ன காஞ்சிபுரம் முருகன் நெசவாளர் குடியிருப்பு தாட்டித்தோப்பு பகுதியில் ஸ்ரீரேணுகா பரமேஸ்வரி ஆலயம் அமைந்துள்ளது. இப்பகுதியில் பிரசித்தி பெற்ற ஆலயமாக இவ்வாலயம் உள்ளதால் நாள்தோறும் பக்தர்கள் வழிபட்டு செல்வர். தற்போது இந்த ஆலயத்தை புனரமைத்து வெள்ளிக்கிழமையான நேற்று காலை கும்பாபிஷேகம் நடைப்பெற்றது.
முன்னதாக வியாழக்கிழமையன்று கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, லஷ்மி ஹோமம், நவாக்கிரக ஹோமம், கோ பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து வெள்ளிக்கிழமையான நேற்று காலை இரண்டாம் கால பூஜை, யாத்ரா தானம் மஹா ஹோமம் நடத்தப்பட்டு மூலவருக்கு மஹா கும்பாபிஷேகம் அர்ச்ச்சகர்களால் சிறப்பாக நடைப்பெற்றது..
பின்னர் அங்கு குழுமியிருந்த பக்தர்களுக்க கலச நீர் தெளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானத்தை விழா ஏற்பாட்டாளர்கள் வழங்கினர்

No comments
Thank you for your comments