திருட்டு வழக்கில் எதிரிகளுக்கு 6 வருட சிறை தண்டனை விதிப்பு
1)உறமீத் உறீசைன் (35) த/பெ.அப்துல் கரீம், நூஉற் கிராமம், மேவாட் மாவட்டம், உறரியான மாநிலம்,
2) இர்பான் (28) த/பெ தீன் மேவாட் மாவட்டம், ஹரியான மாநிலம், 3) ஜபித்(25) த/பெ.இக்பால், மேவாட் மாவட்டம், ஹரியான மாநிலம் மற்றும் 4)அலிஜான்(50) த/பெ.தீன் மேவாட் மாவட்டம், ஹரியான மாநிலம் ஆகிய நான்கு பேரை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் வழக்கின் நீதிமன்ற விசாரணை ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர், அவர்களின் உத்தரவின்பேரில் அப்போதைய சுங்குவார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.சங்கர். அவர்கள். நீதிமன்ற கா.627 திரு. மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்றம் அரசு வழக்கறிஞர் திருமதி.மைதிலி ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தினார்கள்.
இந்நிலையில் இன்று (15.12.2023) மேற்படி வழக்கின் எதிரிகளான 1)உறமீத் உறீசைன், 2) இர்பான், 3)ஜபித் மற்றும் 4) அலிஜான் ஆகிய நான்கு பேருக்கும் ஸ்ரீபெரும்புதூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி திரு.ராம்குமார்.BA.BL., அவர்கள் மேற்படி எதிரிகள் குற்றவாளிகள் என உறுதி செய்து 6 வருடம் சிறை தண்டனை, ரூபாய் 10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும் இவ்வழக்கில் எதிரிகளுக்கு தண்டணை பெற்றுத்தர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர். நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட காவல் நிலைய உதவி காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

No comments
Thank you for your comments