நசரத்பேட்டை அரசுப் பள்ளியில் ரூ.91லட்சம் மதிப்பல் வகுப்பறை கட்டுமானப் பணி, முதன்மைக் கல்வி அலுவலர் அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம்,டிச.15:
காஞ்சிபுரம் அருகே நசரத்பேட்டையில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்ட வெள்ளிக்கிழமை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி அடிக்கல் நாட்டினார்.
படவிளக்கம் : கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள் கட்ட செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினார் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி
காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக் கோட்டையில் செயல்பட்டு வரும் கார் உதிரி பாகங்கள் உற்பத்தி தொழிற்சாலையான ஹூண்டாய் மொபிஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ரூ.91.22லட்சம் மதிப்பில் இரண்டு மாடியுடன் கூடிய 6 வகுப்பறைக்கட்டிடங்கள் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது.
இத்திட்டத்தினை யுனைடெட் வே ஆப் சென்னை என்ற தொண்டு நிறுவனம் செயல்படுத்தவுள்ள நிலையில் அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.வெற்றிச்செல்வி தலைமை வகித்து செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினார்.
ஹூண்டாய் மொபிஸ் நிறுவன துணை மேலாளர் ஜி.நரசிம்மன்,யுனைடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் சுதிர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பள்ளித் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி வரவேற்று பேசினார்.
உதவித் தலைமை ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.விழாவில் யுனைடெட் வே ஆப் சென்னை தொண்டு நிறுவன தகவல் தொடர்பு அலுவலர் வினோத்,கல்வித்துறை ஆய்வாளர் சிவக்குமார் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

No comments
Thank you for your comments