Breaking News

புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆய்வு

சென்னை, டிச.8- 

சென்னை புழல் ஏரியில் அமைச்சர்கள் துரைமுருகன், மூர்த்தி ஆகியோர் ஆய்வு செய்தனர்.



ஏரி

மிக்ஜம் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால் சென்னை ஸ்தம்பித்துள்ளது. கடந்த டிச. 3, 4 ஆம் தேதி பெய்த மழையால் இன்னும் சென்னையின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னையின் பிரதானமான புழல் ஏரி நிரம்பி அதன் கரை உடையும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், புழல் ஏரி பாதுகாப்பாகவே உள்ளது என்று தமிழக நீர்வளத்துறை செயற்பொறியாளர் விளக்கம் தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

இந்நிலையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் நேரில் சென்று புழல் ஏரியை பார்வையிட்டனர். மேலும், ஏரியின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து அதிகாரிகளிடமும் நிலைமை குறித்து கேட்டறிந்தனர்.

பின்னர் பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், புழல் ஏரியால் மக்களுக்கு எந்த ஆபத்தும் வராது என்றார்.

நேற்று காலை 6 மணி நிலவரப்படி ஏரியில் 20 அடி நீர் இருப்பு உள்ளது. ஏரியின் கொள்ளளவு 3012 மி.க. அடியாக உள்ளது. நீர்வரத்து 550 கனஅடி. தற்போது ஏரியிலிருந்து வினாடிக்கு 100 கனஅடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.



No comments

Thank you for your comments