பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 - ஆயத்த பணிகள் தீவிரம்
அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், செவிலிமேடு கிராமத்தில் அமைந்துள்ள தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரக் கிடங்கிலிருந்து, முதல் நிலை சரிபார்ப்பு முடிவுற்ற மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களிலிருந்து, அலுவலர்களுக்கு பயிற்சியும் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்துவதற்காக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும், இன்று (15-12-2023) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவி (Control Unit) -70, வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit) -70 மற்றும் வாக்காளர் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரம் (VVPAT ) – 70 ஆகியவை, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
மேற்படி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பொது மக்களின் விழிப்புணர்வுக்காக, வருவாய் கோட்டாட்சியர்கள் அலுவலகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் வைக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.


No comments
Thank you for your comments