Breaking News

விவசாயிகளுக்கு ரூ.7.60 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன், மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்கள் வழங்கல்

காஞ்சிபுரம்  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், விவசாயிகளுக்கு ரூ.7.60 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன் கூடிய வேளாண் இடுப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்கள்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில், நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும்  நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்  (22.12.2023) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வேளாண்மை துறை, வேளாண் பொறியியல் துறை, தோட்டக்கலைத் துறை,  கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட அனைத்து துறை சார்ந்த அலுவலர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை திட்டங்கள் தொடர்பாக அறிவுரைகள் விவசாயிகளுக்கு வழங்கினார். மேலும் விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் விளக்கம் அளித்தனர்.

இன்று நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில், வேளாண்மை துறை சார்பில்,  8 விவசாய பயனாளிகளுக்கு ரூ.7.40 இலட்சம் மதிப்பில் பயிர் கடனும், 2 விவசாய பயனாளிகளுக்கு விசைத்தெளிப்பானும், 1 விவசாய பயனாளிக்கு உளுந்தும், 1 விவசாய பயனாளிக்கு தார்பாலினும், 1 விவசாய பயனாளிக்கு திரவ உயிர் உரங்களும், என மொத்தம்          5 விவசாய  பயனாளிகளுக்கு  ரூ.20,796 மதிப்பில்   மானியத்துடன்   கூடிய   இடுபொருட்களும், ஆக மொத்தம் 13 விவசாய பயனாளிகளுக்கு, ரூ.7.60 இலட்சம் மதிப்பிலான பயிர் கடன் மற்றும் மானியத்துடன்   கூடிய  வேளாண்   இடுப்பொருட்களை  மாவட்ட  ஆட்சித்தலைவர்  அவர்கள்  வழங்கினார்கள்.

இக்கூட்டத்தில், கூட்டுறவு துறை மண்டல  இணை  பதிவாளர்  திருமதி.பா.ஜெயஸ்ரீ,  வேளாண்மை  இணை இயக்குநர் முனைவர்.பிரின்ஸ் கிளமென்ட்,  வேளாண்மை   துணை   இயக்குநர்/ மாவட்ட  ஆட்சியரின்  நேர்முக  உதவியாளர் (வே)  திரு.ரா.ராஜ்குமார் மற்றும்  அரசு  அலுவலர்கள், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர்.

வெளியீடு : செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments