Breaking News

74வது காசநோய் வில்லைகள் வெளியீடு

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற 74வது காசநோய் வில்லைகள் வெளியீட்டு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் காசநோய் வில்லைகளை வெளியிட்டார்.


இன்று (22.12.2023) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில், நடைபெற்ற 74வது காசநோய் வில்லைகள் வெளியீட்டு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,  இ.ஆ.ப., அவர்கள் வெளியிட, துணை இயக்குநர் மருத்துவப் பணிகள் (காசநோய்) மரு.மு.காளீஸ்வரி அவர்கள் பெற்றுக் கொண்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், இந்த ஆண்டு 12,000 எண்ணிக்கையிலான காசநோய் வில்லைகள் ரூ.60,000/- மதிப்பில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் திரட்டப்படும் நிதி காசநோய் தடுப்பு திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இக்காசநோய் வில்லைகள் மருத்துவத்துறை மட்டும் அல்லாது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி அலுவலர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் ஊராட்சி மன்ற அலுவலர்கள் மூலமாக விற்பனை செய்யப்படும். எனவே பொதுமக்கள் இந்நோயை முற்றிலும் குணப்படுத்த ஒத்துழைப்புக் கொடுக்குமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், இ.ஆ.ப., அவர்கள் கேட்டுக் கொண்டார்.

வெளியீடு:  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments