Breaking News

காஞ்சிபுரத்தில் தேசிய டென்னிஸ் போட்டி - 6 மாநிலங்களைச் சேர்ந்த 80 வீரர்கள் பங்கேற்பு

காஞ்சிபுரம், டிச.24:

காஞ்சிபுரத்தில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய டென்னிஸ் போட்டியில் 6 மாநிலங்களைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர்.

காஞ்சிபுரம் அண்ணா விளையாட்டரங்க மைதானத்தில் சனி,ஞாயிறு ஆகிய இரு தினங்கள் தேசிய அளவிலான டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் டென்னிஸ் சங்கமும், பாரூக் சில்க் டிரேடர்ஸ் நிறுவனமும் இணைந்து நடத்திய இப்போட்டிகள் நிறைவு பெற்றதையடுத்து பரிசளிப்பு விழா நடைபெற்றது. 

விழாவிற்கு சங்கத்தின் தலைவர் ஏ.குணாளன் தலைமை வகித்தார்.சங்க செயலாளர் டி.அசோக்நிர்மல்ராஜ் முன்னிலை வகித்தார்.சங்க பொருளாளர் எம்.பாரூக் வரவேற்று பேசினார்.


இருதினங்கள் நடைபெற்ற இப்போட்டியில் ஜார்கண்ட், உத்தரகாண்ட், தெலுங்கானா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

போட்டிகள் 19 வயது ,35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டோர் என 3 பிரிவுகளாகவும் இவற்றில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் போட்டிகளும் நடைபெற்றது.

சிறந்த ஆட்டக்காரராக உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த உமாகாந்த்துக்கு பரிசு வழங்கப்பட்டது. 

போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் எழிலரசன் கலந்து கொண்டு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி பேசினார்.ஏற்பாடுகளை காஞ்சிபுரம் மாவட்ட அமெச்சூர் டென்னிஸ் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

No comments

Thank you for your comments