காஞ்சிபுரம் தூய இதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் - சிறப்பு கூட்டு பிராத்தனை
காஞ்சிபுரம் :
ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய இந்த கிறிஸ்துமஸ் பிராத்தனையில், ஏராளமானோர் கலந்து கொண்டு பிராத்தனையில் ஈடுபட்ட நிலையில் இவ்வாண்டு நடைபெற்று வரும் பிராத்தனையில் அதிகளவிலான கிறிஸ்துவர்கள் பெருந்திரளாக தங்களது குடும்பத்தாருடன் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.
இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கிறிஸ்துமஸ் தின கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ள நிலையில், காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் அமைந்துள்ள தூய இதய அன்னை ஆலயத்தில் உலக நன்மை வேண்டியும், கொடுமையான நோய் உலகை விட்டு அகல வேண்டியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சிறப்பு கூட்டு பிராத்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக ஒன்றிணைந்து கலந்துக் கொண்டு இயேசு கிறிஸ்துவிடம் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றக் கோரி தீவிர பிராத்தனையில் ஈடுபட்டனர்.
மேலும் மனித நேயம், கருணை, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் கிறிஸ்துவர்கள் இந்த கிறிஸ்துமஸ் தினத்தினை கொண்டாடி மகிழ்ந்தனர்.
மேலும் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும்,இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் அழகிய கிறிஸ்துமஸ் குடிலும் அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



.jpg)
No comments
Thank you for your comments