உத்தரமேரூரில் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மணிகள் மற்றும் அதை தயாரிக்கும் உலைகள் கண்டுபிடிப்பு
காஞ்சிபுரம் :
இதுகுறித்து உத்தரமேரூர் வரலாற்று ஆய்வு மையத் தலைவர் கொற்றவை ஆதன் கூறியதாவது:-
உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கடல் மங்கலம் கிராமம் இந்த கிராமத்தில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அழிஞ்சில் காடு மற்றும் மடு ஓடை ஆகிய நீர் நிலைகளுக்கு அருகே கள ஆய்வு மேற்கொண்ட பொழுது பல நிறங்களில் பல வடிவங்களில் முழுமையான மற்றும் உடைந்த நிலையில் பல மணிகள் கிடைத்தன மேலும் மணிகள் தயாரிப்பதற்கு முந்தைய நிலையில் இருக்கும் மூலப் பொருட்களும் பல நிறங்களில் பல துண்டுகளாக கிடைத்தன.
இம்மண்ணிகளானது
மஞ்சள்
பச்சை
நீலம்
கருப்பு
சிவப்பு
ஆரஞ்சு
மற்றும்
கருநீலம்
ஆகிய நிறங்களில் இருந்தன
அதன் அருகிலேயே மேடான பகுதியில் உடைந்த பானை ஓட்டு துண்டுகள் கிடைத்தன இதில் சில பானை ஓட்டு துண்டுகளில் மெழுகு போன்ற பூச்சு காணப்பட்டது.
கருப்பு
சிவப்பு
பச்சை
மற்றும் கரும்பச்சை ஆகிய நிறங்களில்
இம் மெழுகு பூச்சிகள் இருந்தன
சில பானை ஓடுகளில் ஒரு பக்கமும் சில பானைஓட்டு துண்டுகளில் இரண்டு பக்கமும் இந்த மெழுகு பூச்சி காணப்பட்டது
இவைகள் பல பள என மின்னியது பார்ப்பதற்கு தற்பொழுதைய டைல்ஸ் போல இருந்தது.
இதை கடந்த இரண்டு ஆண்டுகளாக அவ்வப்பொழுது சேகரித்தோம். இவைகள் எந்த காலகட்டத்தை சேர்ந்ததாக இருக்கும் என ஆராய்ந்து வந்தோம்.
இந்நிலையில் கீழடி மற்றும் அரிக்கமேடு அகழ்வாய்வில் கிடைத்த மணிகளோடு இங்கு கிடைத்த மணிகளை ஒப்பிட்டு பார்த்தோம்.
அப்போது அதன் வடிவங்களோடும் வண்ணங்களோடும் அளவுகளோடும் இங்கு கிடைத்த மணிகளும் முழுமையாக ஒத்துப் போவதை எண்ணி வியந்தோம்.
எனவே இதை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை உறுதி செய்தோம்.
அழிஞ்சில் காட்டிற்கு இரண்டு கிலோமீட்டர் தொலைவில் மேற்கு பகுதியில் உள்ள பெரிய ஏரிக்கு அருகே சித்தமல்லி கிராமத்திற்க்கு
செல்லும் வழியில் களஆய்வு மேற்கண்ட பொழுது வட்ட வடிவில் பானை ஓடுகளால் எழுப்பப்பட்ட இரட்டை அடுக்கு சுவர் அமைப்பு கொண்ட ஒரு முழு உலை போன்ற அமைப்பையும் அதன் அருகிலேயே மேடான பகுதிகளில் சிதைந்த நிலையில் இதுபோன்ற மேலும் சில உலைகள் இருப்பதை கண்டறிந்தோம் இவ்விடத்தின்அருகிலேயேயும் 2000ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்திய மணிகள் முழுமையாகவும் உடைந்த நிலையிலும் மணிகள் தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களின் துகள்கள் கிடைத்தன.
மேலும் பானை ஓட்டு துண்டுகள் மெழுகு பூச்சியுடன் கூடியதாகவும் ஆங்காங்கே இருந்தன...
உரை கிணறு போன்ற வட்ட வடிவில் காணப்பட்ட முழுமையான உலையானது மூன்றறைஅடி நீளம் மூன்றறைஅடி அகலம் கொண்டதாக இருந்தது
இதை ஆய்வு செய்த சென்னை பல்கலைக்கழக தொல்லியல் துறை மாணவர்கள் இது கண்ணாடி மணிகள் உற்பத்தி செய்யும் உலைகள் என்பதும் இவைகள் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதையும் உறுதி செய்தனர்.
இந்த இடத்திலிருந்து நாங்கள் சேகரித்த மணிகள் அதை தயாரிக்கும் மூலப் பொருட்கள் மெழுகு பூச்சுடன் கூடிய உடைந்த பானை ஓட்டு துண்டுகள் ஆகியவை கிடைத்த அழிஞ்சில் காடு என்பது சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் கிழக்கு பக்கமாக இருக்கிறது
இங்கிருந்து மழை நீர் மற்றும் ஏரியிலிருந்து வெளியாகும் உபரி நீர் களங்கள் வழியாக அழிஞ்சில் காட்டை சென்றடைகிறது எனவே இங்கிருந்து மழைக் காலங்களில் இந்த மணிகள் அடித்து செல்லப்பட்டு இருக்க வாய்ப்புள்ளது
அல்லது அழிஞ்சில் காட்டில் இதே போன்ற உலைகள் இருந்து காலப்போக்கில் மறைந்திருக்கலாம் என தோன்றுகிறது.
மேலும் அந்தக் காலங்களில் இப்பகுதியில் பெரிய நீர் நிலையாக ஆறு ஓடி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளும் உள்ளன
மேலும் தொடர் ஆய்வுகளில் ஈடுபட்டால் இது குறித்த அதிக தகவல்கள் கிடைக்கும் என நம்புகிறோம்.
பானைகளில் கண்ணாடி மணி தயாரிக்க பயன்படும் மூலப் பொருட்களை காய்ச்சி கொதிக்க வைத்து தேவையான வடிவங்களில் பயன்படுத்தி இருக்கலாம் அதற்காக மெழுகு பூச்சி தாதுக்கள் பானையின் உட்புறங்களிலும் தேவைக்கு ஏற்ப பானையின் இரண்டு பக்கமும் பூசப்பட்டு சுடுமண் கலயங்களாக இந்த பானைகள் பயன்படுத்தி இருக்கலாம் அந்தப் பானை ஒட்டு துண்டுகளே தற்பொழுது மெழுகு பூச்சுடன் காணப்பட்டதாக இருக்கும் என நம்புகிறோம்.
No comments
Thank you for your comments