காஞ்சிபுரத்தில் ரூ.50லட்சம் மதிப்பில் நூலகத்துக்கு கூடுதல் கட்டிடம் - எம்எல்ஏ அடிக்கல் நாட்டினார்
காஞ்சிபுரம், டிச.1:
காஞ்சிபுரம் நகர் சின்னக்காஞ்சிபுரம் பகுதியில் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அண்ணா கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது.இந்நூலகத்தின் முதல் மாடியில் ரூ.50லட்சம் மதிப்பில் கூடுதல் கட்டிடம் கட்ட காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன் செங்கல்லை எடுத்துக் கொடுத்து அடிக்கல் நாட்டினார்.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மேயர் எம்.மகாலட்சுமி யுவராஜ்,மாநகராட்சி மண்டலக்குழுவின் தலைவர்கள் கே.சந்துரு,மோகன்,திமுக காஞ்சிபுரம் மாநகர செயலாளர் சிகேவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதனையடுத்து காஞ்சிபுரம் நகர் செலிவிமேடு பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூ.13.50லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டிடத்தையும்,பள்ளியில் புதியதாக ரூ.2 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையையும் எம்எல்ஏ எழிலரசன் திறந்து வைத்தார்.
No comments
Thank you for your comments