ஊராட்சிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் அலோசனை கூட்டம்..
சென்னை :
சென்னை மாநகரை ஒட்டி அமைந்துள்ள காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட நகர்புறத்தை ஒட்டிய ஊராட்சிகளில் நிலவும் குடிநீர், சாலை வசதி மற்றும் குப்பைகளை கையாளுவதில் உள்ள பிரச்சனைகள் குறித்து இன்று (30.11.2023) காலை மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் திரு.பா.பொன்னையா, I.A.S., நகராட்சி நிர்வாக இயக்குநர் திரு.சிவராசு, I.A.S., சென்னை குடிநீர் ற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய மேலாண்மை இயக்குநர் திரு.தட்சணாமூர்த்தி, I.A.S., தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் (TWAD BOARD) திரு.சரவணன், I.A.S., காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன், I.A.S., செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ராகுல்நாத், I.A.S., பரங்கிமலை - பல்லாவரம் கண்டோன்மெண்ட் முதன்மை செயல் அலுவலர் (CEO) திரு.தினேஷ் குமார் ரெட்டி, I.D.E.S., பெருநகர சென்னை மாநகராட்சி முதன்மை பொறியாளர், மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர்கள், சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, குன்றத்தூர் ஒன்றியத்தில் அடங்கிய அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், மௌலிவாக்கம், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், பெரியபணிச்சேரி, தண்டலம், தரப்பாக்கம், இரண்டாம்கட்டளை ஆகிய 10 ஊராட்சிகளில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவதற்கு போதுமான இட வசதி இல்லாததால் அந்த குப்பைகளை பெருநகர சென்னை மாநகராட்சியின் (GCC) திடக்கழிவு மேலாண்மை சேவையின் கீழ் கொண்டு வருவது குறித்தும்,
மேலும் மேற்கண்ட 10 ஊராட்சிகளுக்கு சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் மூலம் போரூரில் மண்டலத்திற்கு வழங்கப்படும் குடிநீரை மேலும் விரிவாக்கம் செய்து, SUMP-கள் அமைத்து குழாய் மூலம் வழங்க நடவடிக்கை எடுப்பது குறித்தும்,
அந்த ஊராட்சிகளில் உள்ள பல ஆண்டுகளாக போடப்படாமலும் - சீரமைக்கப்படாமலும் உள்ள மிகவும் பழுதாகி உள்ள ஊராட்சி சாலைகளை விரைந்து சீரமைக்க சிறப்பு நிதி ஒதுக்குவது குறித்தும்,
சென்னை புறநகர் பகுதியில் உள்ள பரங்கிமலை - பல்லாவரம் கண்டோன்மெண்ட் கண்டோன்மெண்ட் பகுதியில் பாதாள சாக்கடைத் திட்டம் மற்றும் மெட்ரோ குடிநீர் திட்டம் நிறைவேற்றுவது குறித்தும்
சென்னை மாநகராட்சி மற்றும் மெட்ரோ குடிநீர் வாரியத்தின் மூலம் கூட்டாக மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் முன்மொழிவுகள் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments