Breaking News

எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன சனி? - அதன் பலன்கள்

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 20-ந் தேதி (நேற்று) மாலை 5.23க்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆனார் சனி பகவான்.


  • ராசி - சனியின் பெயர் - பலன்

மேஷம்

11-ம் வீடு - லாப சனி -  அதிக முயற்சிக்குப் பிறகு லாபம் அதிகரிக்கும்.

சனிபகவான் 11-ம் வீட்டில் இருந்தால் நோயற்ற வாழ்வு, எதிர்பாராத லாபங்கள், அசையா சொத்து சேர்க்கை உண்டாகும். மூத்த சகோதர தோஷம் உண்டு.


ரிஷபம்

10-ம் வீடு - தொழில் சனி - தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம்.

10-ம் வீட்டில் சனி இருந்தால் எதிர் நீச்சல் போட்டு முன்னேறும் அமைப்பு அடிமைத் தொழில், மற்றவர்களை வழி நடத்தும் வலிமை உண்டாகும்.


மிதுனம்

9-ம் வீடு - பாக்கிய சனி - தந்தை - தந்தை வழி உறவினர்களுடன் கருத்து மோதல் - பணப் பிரச்சனை.

9-ம் வீட்டில் சனிபகவான் இருந்தால் பொதுப்பணியில் ஈடுபடும் அமைப்பு, தந்தை மற்றும் பூர்வீக வழியில் அனுகூலமற்ற அமைப்பு, பூர்வீக சொத்து இழப்பு உண்டாகும்.


 

கடகம்

8-ம் வீடு  -  கடகம் -  அஷ்டம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

8-ம் வீட்டில் இருந்தால் நீண்ட ஆயுள் உண்டாகும் என்றாலும் பொருளாதார கஷ்டம், ஏழை குடும்பத்தில் திருமணம், எதிரிகளால் கண்டம் மற்றும் கண்களில் பாதிப்பு உண்டாகும். அஷ்டம ஸ்தானமான 8-ல் சஞ்சரிக்கும்போது அஷ்டம சனியாகும்.


சிம்மம்

7-ம் வீடு  -  கண்டக சனி - வாகனங்களில் செல்லும் போது கவனம் - வாழ்க்கைத்துணையுடன் தேவையற்ற மன சஞ்சலம்.

7-ம் வீட்டில் சனி இருந்தால் திருமண தாமதம், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடு மற்றும் கூட்டாளிகளால் நஷ்டம் உண்டாகும்.


கன்னி

6-ம் வீடு  -  ரண ருண சனி - உடல்நலத்தில் கவனம் தேவை.

சனிபகவான் 6-ம் வீட்டில் இருந்தால் எதிரிகளைப் பந்தாடும் பலம், வலிமையான வாழ்க்கை மற்றும் எதிர்பாராத பண வரவுகள், துணிவுடன் வாழும் அமைப்புகளும் உண்டாகும்.



துலாம்

5-ம் வீடு  -  பஞ்சம சனி - குழந்தைகளுடன் தேவையில்லாத வாக்குவாதம்.

5-ம் வீட்டில் இருந்தால் புத்திர தோஷம், பூர்வீக தோஷம் மற்றும் உறவினர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும்.

விருச்சிகம்

4-ம் வீடு  - அர்த்தாஷ்டம சனி - வீடு மனை வாகனம் ஆகியவற்றை வாங்குவதற்கு தடை.

4-ம் வீட்டில் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி. மேலும் இந்தக் காலகட்டத்தில் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள் உண்டாகும்.


தனுசு

3-ம் வீடு  - தைரிய வீர்ய சனி - தைரிய அதிகரிக்கும் - மதியூகம் வெளிப்படும்.

சனிபகவான் 3-ம் வீட்டில் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி, தைரியம் தாராளமான பண வரவுகள் உண்டாகும்.


மகரம்

2-ம் வீடு  - வாக்குச் சனி - வாக்கு கொடுக்கும் போது அதிக கவனம் தேவை. (ஏழரை சனியில் பாத சனி)

2-ம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்னைகள், வீண் வாக்குவாதம், சொத்தில் நஷ்டம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.



கும்பம்  

1-ம் வீடு  -   ஜென்ம சனி - அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.

சனிபகவான் 1-ம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தை ஜென்மசனி என்பர். இந்தக் காலகட்டத்தில் வீண் பிரச்னைகள், உடல் உபாதைகள் உண்டாகும்.



மீனம்  

விரைய சனி- வீண் விரையம் ஏற்படுதல். (ஏழரை சனி ஆரம்பம்)

12-ம் வீட்டில் சனி அமையப் பெற்றால் கண்களில் பாதிப்பு, எதிரிகளால் தொல்லை, வீண் விரயங்கள் ஏற்படும்.


  • சனி ஸ்லோகம்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம் யமாக்ரஜம்

சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் தம் நமாமி ஸனைச்சரம்.

  • அர்த்தம்

கண்ணின் மை போன்று கருமை நிறம் கொண்டவனே! சூரியனின் மைந்தனே! எமதர்மனின் சகோதரனே! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே! மெதுவாகச் சஞ்சாரம் செய்பவனே! சனிபகவானே! உன்னைப் போற்றுகிறேன்.

  • பொதுவான பரிகாரங்கள்

தினமும் வினாயகர் - ஆஞ்சநேயர் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனைத் தரும்.

தினமும் வினாயகர் அகவல் - ஹனுமான சாலீசா - சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது நல்ல பலன்களைப் பெற்று தரும்.

அடிக்கடி மஹாகணபதி ஹோமம் அல்லது பஞ்சமுக ஆஞ்சநேயர் ஹோமம் செய்வதும் நிறைவான மாற்றத்தைக் கொடுக்கும்.

தினமும் முன்னோர்கள் வழிபாட்டைச் செய்வது - குறைந்தபட்சம் அமாவாசை தினத்தன்றாவது முன்னோர்களை வழிபடுவது பலம் சேர்க்கும்.

தினமும் காகத்திற்கு சாதம் வைப்பது மிகச் சிறந்த பரிகாரமாகும்.

  • பொது பலன்கள்

சனி ஆட்சியாக மாறுவதால் சுப நிகழ்ச்சிகளில் தடை அகலும். திருமணம் சம்பந்தப்பட விஷயங்களில் தொய்வு ஏற்படும். ஆனால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரையங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்ச கொஞ்சமாக உயரும். அவரவர் தகுதிக்கேற்ற மாதிரி கடன் உருவாகும்.

இடி மின்னல் அதிகம். இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.

புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேலையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைத்தலும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். பல முக்கிய வழக்குகளுக்கு இந்த ஆண்டு எதிர்பார்த்த தீர்ப்பு நல்ல முறையில் வரும்.

இவ்வாறு ஜோதிடர் கணித்துள்ளார்.

No comments

Thank you for your comments