Breaking News

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள்

திமுக இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு  காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் பள்ளி மாணவ மாணவர்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில் திமுக இளைஞரணி செயலாளர்-விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி ஏற்பாட்டில் மாநகர செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன் தலைமையில் மாநகர மாணவர் அணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அணி நிர்வாகிகள் எம்.எஸ்.பி.பாரதிதாசன், சரண்ராஜ், எம்.டி.கீர்த்திவாசன், பெருமாள், சொயேப் கான்,பிரேம்சேகர்,ராஜேஷ்,சுதர்சன்,நந்தினி,திருவள்ளுவன் ஆகியோர் முன்னிலையில் சின்ன காஞ்சிபுரம் யாக சாலை நகராட்சி நடுநிலைப் பள்ளியில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்,தேர்வு அட்டை,பென்சில் பாக்ஸ்,இனிப்புகள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை மாணவரணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும்மான சி.வி‌.எம்.பி.எழிலரசன் வழங்கினார்.

இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ்,மாநில வர்த்தகர் அணி துணை செயலாளர் வி.எஸ்.இராமகிருஷ்ணன், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர்,வெங்கடேசன்,மண்டல குழு தலைவர் சசிகலா,மாநகர அவைத்தலைவர் கே.ஏ.செங்குட்டுவன்,பொதுக்குழு உறுப்பினர் சிகாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ்,மாவட்ட விளையாட்டு மேம்பாடு அணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாமன்ற உறுப்பினர்கள் சங்கர், கமலக்கண்ணன், கார்த்திக், சரவணன்,மாவட்ட அணிகளின் நிர்வாகிகள் ராம்பிரசாத், செல்வி, நீலகண்டன், தமிழ்ச்செல்வன்,நவீன் சிவாஜி, வட்ட கழக செயலாளர்கள் தெய்வசிகாமணி,சங்கர் தனசேகர்,பகுதி கழக நிர்வாகிகள் மலர்மன்னன், கோவிந்தராஜன்,செந்தில் ,வரதராஜன்,விமல் தாஸ்,வினோத்குமார்,பாண்டியன் உள்ளிட்ட திமுகவினர் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments