காஞ்சியில் இருசக்கர வாகனப் பேரணி பயணம்... குவிந்த வாழ்த்துகள்
கழக இளைஞர் அணிச் செயலாளரும் - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் "மாநில உரிமை மீட்பு இரண்டாவது மாநில மாநாட்டிற்கான இருசக்கர வாகன பிரச்சாரப் பேரணியை" கடந்த 15 ஆம் தேதி கன்னியாகுமரி - திருவள்ளுவர் சிலை முன்பாக தொடங்கி வைத்தார்.
இந்த இருசக்கர வாகனப் பேரணி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்திற்க்கு வருகை தந்த போது வாகனங்களில் வந்த இளைஞர்களை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் MLA அவர்களின் தலைமையில் காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியிலிருந்து காஞ்சிபுரம் பிரதான சாலைகளான கம்மாளத் தெரு, பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், இரட்டை மண்டபம், காமராஜர் சாலை வழியாக சென்று பெரியார் தூண் அருகே தெருமுனை பிரச்சாரத்தினை சேலம்.ராஜா தமிழ்மாறன் அவர்களின் உரையாற்றலுடன் பேரறிஞர் அண்ணாவின் நினைவு இல்லத்திற்க்கு சென்று நிறைவாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் பயணம் மேற்கொள்ளும் இளைஞர்களுக்கு நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வழி அனுப்பினர்.
உடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம்,மாநகர கழக செயலாளர் சி.கே.வி.தமிழ்செல்வன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார்,மாநகராட்சி மேயர் மகாலட்சுமி,மாநகர துணை செயலாளர் ஏ.எஸ்.முத்துசெல்வம், பகுதி செயலாளர்கள் திரு.திலகர்,திரு.எஸ்.சந்துரு, திரு.அ.தசரதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், க.குமணன்,படுநெல்லி பி.எம்.பாபு,பி.எம்.குமார், பி.சேகர், பேரூர் செயலாளர்கள் என்.பாண்டியன், பாரிவள்ளல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு. அ.யுவராஜ்,தலைமை பொதுக்குழு உறுப்பினர் எஸ். சிகாமணி, இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் திரு.சஞ்சய் காந்தி,மாவட்ட சிறுபான்மை நலப் பிரிவு துணை தலைவர் இ.ஜாபர்,மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் சுகுமார்,துணை அமைப்பாளர்கள் மணிகண்டன், நந்தா,குணசேகரன், உள்ளிட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கிளை கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள்.
No comments
Thank you for your comments