இருபேருந்துக்கு இடைய சிக்கிய விபத்தில் மருத்துவர் உயிரிழப்பு..
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம் இலுப்பப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஜோயஸ் ஜோஸ்வா வயது 24 பிசியோதெரபி மருத்துவரான ஜோஸ்வா சின்ன காஞ்சிபுரம் பகுதியில் தனியார் மருத்துவமனையில் பிசியோதெரபி மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.
காஞ்சிபுரம் அடுத்த இந்திரா நகர் பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் பணியை முடித்துக் கொண்டு தனது இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையம் அருகே மேம்பாலத்தில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த ஜோஸ்வா அரசு பேருந்துக்கும் தனியார் பேருந்துக்கும் இடையே சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து குறித்து சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது தகவலின் பெயரில் வந்த சிவ காஞ்சி போலிசார் பிசியோதெரபி மருத்துவர் ஜோஸ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிசியோதெரபி மருத்துவர் ஜோயஸ் ஜோஸ்வா கடந்து நான்கு நாட்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்துள்ளார்.
பணிக்கு சேர்ந்த 4 நாட்களில் சாலை விபத்தில் இளம் மருத்துவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
No comments
Thank you for your comments