சுருள்வீச்சுப் போட்டியில் மாநில அளவில் காஞ்சிபுரம் மாணவருக்கு வெள்ளிப்பதக்கம்
காஞ்சிபுரம், நவ.8:
திருப்பத்தூர் மாவட்டத்தில் அண்மையில் நடந்த மாநில அளவிலான சுருள்வீச்சுப் போட்டியில் காஞ்சிபுரத்தில் 6 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் மாணவர் 2வது இடத்தைப் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்றுள்ளார்.
காஞ்சிபுரம் அருகே குருவிமலை கிராமத்தை சேர்ந்த சிவப்பிரகாசம் மகன் சி.சுர்ஜித்(11) காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலகம் அருகே வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் உள்ள பியூஎம்எஸ் அரசு நடுநிலைப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர் திருப்பத்தூரில் அண்மையில் மாநில அளவில் நடந்த சிலம்பத்தின் துணை விளையாட்டான சுருள்வீச்சுப் போட்டியில் கலந்து கொண்டு 2 வது இடத்தைப் பிடித்தார்.இவருக்கு 4 கிராம் அளவில் வெள்ளிப்பதக்கமும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.
இம்மாணவர் இதற்கு முன்பு காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒற்றைக்கம்பு சுற்றும் சிலம்பப் போட்டியில் முதல் பரிசும், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த இரட்டைக்கம்பு சுற்றும் சிலம்பப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் பெற்றவர்.
இம்மாணவரை அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், குருவிமலை கிராமத்தின் பிரமுகர்கள் உட்பட பலரும் பாராட்டினார்கள்.

No comments
Thank you for your comments