Breaking News

தீபாவளி முன்னிட்டு பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிக பேருந்து நிலையம் - கலெக்டர் நேரில் ஆய்வு

 திருவள்ளூர் : 

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளிலிருந்து  வெளியூர்களுக்கு செல்லும் பயணியர்களின் வசதிக்காக ‌திருவள்ளூர், மாவட்டம்,  பூவிருந்தவல்லி- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனை அருகில் புதிதாக அமைக்கப்படவுள்ள தற்காலிக பேருந்து நிலையத்தை இன்று (08.11.2023) மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


அப்பகுதியில் பயணியர்கள் வசதிக்காக ஏற்படுத்தப்பட வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களோடு கலந்துரையாடி ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் வழங்கினார். 

உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார்,  திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் ஜெயராஜ பௌலின், பூ விருந்தவல்லி நகராட்சி தலைவர் காஞ்சனா சுதாகர், ஆணையர் ஆர்.லதா,  தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் (திருவள்ளூர்)  நெடுஞ்செழியன், காவல் உதவி ஆணையர் ராமச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் (பூவிருந்தவல்லி) காவேரி, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் ஆர்.மாலினி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.பிரதீபா மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் இருந்தனர்








No comments

Thank you for your comments