Breaking News

பெண்ணை மிரட்டி தங்க சங்கிலி பறித்த முகமூடி நபர்...

காஞ்சிபுரம் :

உத்திரமேரூர் அருகே வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி மூன்று சவரன் தங்க சங்கிலியை வாங்கிச் செல்லும் முகமூடி அணிந்த மர்ம நபரின் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்பட்ட படூர் கூட்டுச்சாலையில் ரவி என்பவரின் மனைவி ருக்மணி,40. ரவி கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்த நிலையில் ருக்மணிக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளார்.

இவர்கள் வீட்டின் அருகே, சொந்தமாக சூப்பர் மார்க்கெட், ஹார்டுவேர்ஸ், நகை கடை உள்ளிட்டவை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், நேற்று இரவு சுமார் 7 மணி அளவில் ருக்மணி தனியாக இருந்ததை நோட்டமிட்ட முகமூடி அணிந்த சுமார் 30 வயதுமிக்க மர்ம நபர் ஒருவர் வீட்டிற்குள் சென்று கதவை மூடிக்கொண்டு  நான் சொல்வதைக் கேள் இல்லையேல் கடையில் வேலை செய்து கொண்டுள்ள உன் மகளை கத்தியுடன் உள்ள என் ஆட்கள் உன் மகளை கொன்றுவிடுவார்கள் என மிரட்டி ருக்மணி கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தங்கச் சங்கலியை வாங்கிக்கொண்டு அங்கிருந்து வீட்டின் பின்பக்கமாக தப்பி சென்றுள்ளார்.

இதுகுறித்து ருக்மணி உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பெயரில் போலீசார் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அந்த சுற்று வட்டார பகுதிகளில் தொடர் குற்றச்சம்பவங்கள் நடைபெறுவதால் அப்பகுதியில் காவல் உதவி மையம் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

இதனிடையே வீட்டில் இருந்த பெண்ணை மிரட்டி தங்க நகைகளை வாங்கிச் செல்லும் மர்ம நபரின் வீடியோ காட்சி தற்போது வெளியாகி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments