Breaking News

ஊத்துக்காடு ஊராட்சி மன்ற தலைவர் வீடு, இருசக்கர வாகனத்தை மர்மநபர்கள் சூறை!




காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம், ஊத்துக்காடு கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளவர் சாவித்திரி மணிகண்டன். இவரது வீடு ஊத்துக்காடு கிராமத்தில் உள்ள நிலையில் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு நேற்று நள்ளிரவு காரில் வந்த மர்ம நபர்கள் விட்ட அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களையும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கி விட்டு காரில் ஏறி தப்பிச் சென்றுள்ளனர்.

நள்ளிரவு நேரத்தில் நடந்த செயலால் அதிர்ந்து போன ஊராட்சி மன்ற தலைவர் சாவித்திரி மணிகண்டன் பின்னர் இது குறித்து வாலாஜாபாத் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த வாலாஜாபாத் போலீசார் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு வந்து ஆய்வு மேற்கொண்டு அங்கு பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி நள்ளிரவு நேரத்தில் இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் ஊராட்சி மன்ற தலைவரின் வீடு தாக்கப்பட்டதற்கு தேர்தல் முன்பகை காரணமா அல்லது வேறு ஏதும் காரணமாய் என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊராட்சி மன்ற தலைவரின் வீடு தாக்கப்பட்ட சம்பவம் ஊத்துக்காடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments

Thank you for your comments