Breaking News

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டம்

 காஞ்சிபுரம்  :

காஞ்சிபுரம் மாவட்ட தலைமை இடத்தில் மாவட்ட முதன்மை (ம) அமர்வு நீதிமன்றம் அமைக்க கோரியும், புனரமைப்பு செய்யப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை திறக்க கோரியும் 50 க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு இருந்ததால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செங்கல்பட்டில் இயங்கியது. ஆனால் தற்போது செங்கல்பட்டு தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பின்னரும், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்கள் செங்கல்பட்டிலேயே இயங்கி வருகின்றன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரும்புதூர், உத்திரமேரூர் மாவட்ட முன்சீப் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் புதிய கட்டிடங்களில் இயங்கி வருகின்றன. ஆனால் மாவட்டத் தலைநகரான காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்டநீதிமன்றங்கள் தாலுகா அலுவலகத்தில் இயங்கி வருகின்றன.

இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் வழக்குதொடர்பாக செங்கல்பட்டுக்கு செல்ல வேண்டிய அவல நிலையே உள்ளது. 

எனவே காஞ்சிபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும். தற்போது காஞ்சிபுரத்தில் உள்ள அமர்வு நீதிமன்றம், தொழிலாளர் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் வெவ்வேறு பகுதிகளில் இயங்கிவருகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பகுதிகளில் சென்ற அவதியில் ஏற்படுகின்றனர்.

இதனை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஏழுமலை, டி,சி. சௌந்தரராஜன், பி.சௌந்தரராஜன், லின்கேசன், ஜான் தலைமையில் மாவட்ட நீதிமன்றம் நுழைவாயில் முன்பு 50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் பணியை புறக்கணித்து அடையாளம் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments

Thank you for your comments