களியனூர் ஊராட்சியில் கிராம கணக்கில் இலவச வீட்டு மனை பட்டா-அடங்கல் குறித்து ஆலோசனைக் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியம் களியனூர் ஊராட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலமாக சர்வே எண் 162/2 மற்றும் 321/2 மேலும் 300 மற்றும் 265/1ல் 2000ம் ஆண்டில் பட்டா வழங்கப்பட்டது.
மேலும் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் 2010 ஆம் ஆண்டில் சர்வே எண் 198/2,3ல் 279/1ல் 279/2ல் 278/1A1ல் 199/1 ல் 200/1ல் 261/ல் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா தமிழ்நாடு அரசின் மூலமாக வழங்கப்பட்டிருந்தது.
இந்த பட்டாக்களை எல்லாம் கிராம கணக்கில் மற்றும் படங்களில் ஏற்ற வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவு மூலமும் மாண்புமிகு குரு சிறு தொழில் நிறுவனங்களின் அமைச்சரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட வருவாய் அலுவலரிடமும் கோட்டாட்சியரிடமும் காஞ்சிபுரம் தாசில்தாரிடமும் இது சம்பந்தமான பல்வேறு போராட்டங்கள் 10 ஆண்டுகளாக தொடர்ந்து மனுக்கள் அளித்து வந்தோம்.
அதன் விளைவாக தமிழ்நாடு அரசு பட்டாக்களை அடங்கல் ஏற்ற முன்வந்துள்ளது. இது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் களியனூர் ஊராட்சியில் நடைபெற்றது.
கூட்டத்தை பார்வேந்தன் விடுதலை சிறுத்தை கட்சியின் வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக மக்கள் மன்றத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேஷ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவருமான லாரன்ஸ், களியனூர் ஊராட்சி மன்ற தலைவர் வடிவுக்கரசி ஆறுமுகம், கிராம மக்கள் பயனாளிகள் அனைவரும் பங்கு பெற்றனர்.
120 பேர் மனுக்கள் பெறப்பட்டன ஒத்துழைப்பு நல்கிய அனைத்து துறை அலுவலர்களுக்கும் நன்றியையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்..
No comments
Thank you for your comments