Breaking News

பழங்குடியினர் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நேரில் ஆய்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், பொருளாதாரத்தில் பின்தங்கிய வீடற்ற பழங்குடியின குடும்பங்களுக்கு விப்பேடு, மலையாங்குளம், ஊத்துக்காடு, சிங்காடிவாக்கம் மற்றும் காட்ரம்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் பழங்குடியினர் குடியிருப்பு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. 


இங்கு ரூ.1937.81 இலட்சம் மதிப்பீட்டில் 443 வீடுகள் கட்டும் பணிகளும் மற்றும் ரூ.119.48 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் அடிப்படை வசதி பணிகளும் நடைபெற்று வருகிறது. 

இப்பணிகளை பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் திரு.ச.அண்ணாதுரை அவர்கள் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் திரு.சா.செல்வகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேற்படி இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை விரைவுபடுத்தவும், குடிநீர் மற்றும் மின்சார வசதிகளை விரைவில் முடிக்கவும் அறிவுரை வழங்கினர். ஆய்வின் போது மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின நல அலுவலர் திரு.கு.கணேசன், திருப்பெரும்புதூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் திரு.கு.சரவணன், காஞ்சிபுரம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் திருமதி.எஸ்.ஆர்.கீதா, வாலாஜாபாத் வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி.நா.காஞ்சனா, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் திரு.இரா.வரதராஜன் மற்றும் உதவிப் பொறியாளர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.

No comments

Thank you for your comments