முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10. அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணா நிலை போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 10. அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி காந்தி ரோடு சாலை பெரியார் தூண் அருகே மாபெரும் உண்ணா நிலை போராட்டம் நடைபெற்றது.
தலைமை மாவட்ட தலைவர் பாஸ்கர் வரவேற்புரை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் முன்னிலை மாவட்ட செயலாளர் கார்த்திக் வாழ்த்துரை விநாயகம் முருகன் சித்ரா கிருஷ்ணன் செல்வமணி கோபிநாத் சண்முகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
பத்து அம்ச கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தனர். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன இதில் தமிழக அரசுக்கு முக்கியமான தீர்மானங்கள் தெரிவிக்கப்பட்டன.
முதல் தீர்மானம் 1. 6. 2009 முதல் முதல் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களின் ஊதிய விகிதத்தில் ஏற்பட்டுள்ள குறைபாட்டை நீக்கிட வேண்டும் எனவும் ஓய்வூதிய திட்டத்தை சிபிஎஸ் ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு ரத்து செய்திட வேண்டும் எனவும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பாடத்திட்டத்தில் அனைத்து பாடங்களிலும் 30 சதவீதம் குறைத்திட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் தமிழக அரசு பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அடுத்த கட்ட போராட்டம் வருகின்ற சென்னையில் தொடர் மறியல் போராட்டம் மூன்று நாட்கள் 27. 12. 23 முதல் 29 வரை போராட்டம் நடைபெறும் என பட்டதாரி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்..
No comments
Thank you for your comments