மாற்றுத்திறனாளிகள் குவிந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு - மகளிர் உரிமைத்தொகை கோரி புகார் மனு
- மாற்றுத்திறனாளி உதவித்தொகை வங்குவதால் மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்க மறுக்கப்படுவதாக மாற்றுத்திறனாளிகள் புகார்.
- மாற்றுத்திறனாளிகள் மூன்று சக்கரம் வாகனம் வைத்துள்ள நிலையில் நான்கு சக்கரம் வாகனம் வைத்துள்ளதாக கூறி மகளீர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்களையும் புறக்கணிப்பதாக மாற்றுத்திறனாளிகள் குற்றச்சாட்டு
ஏழை எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தமிழக அரசின் சார்பில் மகளிர் உரிமை தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கு மாற்றுத்திறனாளி குடும்பங்களின் விண்ணப்ப படிவங்கள் மறுக்கப்படுவதாகவும், மூன்று சக்கரம் வாகனம் வைத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பதாக கூறி விண்ணப்பங்கள் நிராகரிப்பதாக கூறி 50க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவல வளாகத்தில் குவிந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் ஏராளமானோர் குவிந்ததால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்றுத்திறனாளிகள் குவிந்துள்ளதை அறிந்து வருவாய் கோட்டாட்சியர் ரம்யா மாற்றுத்திறனாளிகளின் இடத்திற்கே நேரில் வந்து அவர்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.
மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனு மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதால் மாற்றுத்திறனாளிகள் மனுவை வழங்கிவிட்டு கலந்து சென்றனர்.
.jpg)

.jpg)
No comments
Thank you for your comments