இன்றைய (20-11-2023) ராசி பலன்கள்
மேஷம்
எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உண்டாகும். ஆடம்பரத்தைக் குறைத்துச் சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதரவான சூழல் ஏற்படும். மனதளவில் தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் அமையும். வெற்றி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
அஸ்வினி : மனப்பக்குவம் உண்டாகும்.
பரணி : ஆதரவான நாள்.
கிருத்திகை : முன்னேற்றம் உண்டாகும்.
ரிஷபம்
தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். தேவைக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்களால் அனுகூலம் உண்டாகும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப் போக்கு அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
கிருத்திகை : ஆதரவான நாள்.
ரோகிணி : அனுகூலம் உண்டாகும்.
மிருகசீரிஷம் : தன்னம்பிக்கை பிறக்கும்.
மிதுனம்
விவேகமான செயல்பாடுகள் நன்மதிப்பை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களால் நன்மை வந்து சேரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
மிருகசீரிஷம் : மதிப்பு உண்டாகும்.
திருவாதிரை : தேடல் பிறக்கும்.
புனர்பூசம் : ஒற்றுமை உண்டாகும்.
கடகம்
எண்ணிய பணிகள் நிறைவேறுவதில் மாற்றம் உண்டாகும். யாரையும் எளிதில் நம்ப வேண்டும். உத்தியோகப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். குழந்தைகளிடத்தில் கனிவு வேண்டும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளால் மனதில் சில சஞ்சலங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் மீதான எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
புனர்பூசம் : மாற்றம் உண்டாகும்.
பூசம் : கனிவு வேண்டும்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.
சிம்மம்
உறவுகளைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கும். வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
மகம் : சிந்தனைகள் மேம்படும்.
பூரம் : மேன்மை ஏற்படும்.
உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.
கன்னி
மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். அலுவலகத்தில் மரியாதை மேம்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். திட்டமிட்ட சில காரியங்கள் கைகூடும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். கால்நடைகள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். உதவி கிடைக்கும் நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : மரியாதை மேம்படும்.
அஸ்தம் : சாதகமான நாள்.
சித்திரை : மாற்றங்கள் ஏற்படும்.
துலாம்
உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கான சூழல் அமையும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களைச் செய்வீர்கள். கவனம் வேண்டிய நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 3
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.
சுவாதி : சந்திப்பு உண்டாகும்.
விசாகம் : ஆர்வம் ஏற்படும்.
விருச்சிகம்
நெருக்கமானவர்களின் சந்திப்பு ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். திருப்தியற்ற மனநிலை குறையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களில் நிதானம் வேண்டும். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவு ஏற்படும். பழுதடைந்த வாகனங்களைச் சீர் செய்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 7
- அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : சந்திப்பு ஏற்படும்.
அனுஷம் : முயற்சிகள் கைகூடும்.
கேட்டை : முடிவு பிறக்கும்.
தனுசு
எதையும் செய்து முடிக்க முடியும் என்ற சாமர்த்தியம் மேம்படும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். வீடு, மனை விற்பனையில் லாபம் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான ரகசியங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 5
- அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
மூலம் : சாமர்த்தியம் மேம்படும்.
பூராடம் : புரிதல் உண்டாகும்.
உத்திராடம் : ஏற்ற, இறக்கமான நாள்.
மகரம்
வியாபார அபிவிருத்திக்கான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பயனற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவீர்கள். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். ஊக்கம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : தெற்கு
- அதிர்ஷ்ட எண் : 6
- அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை
உத்திராடம் : அபிவிருத்தியான நாள்.
திருவோணம் : செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள்.
அவிட்டம் : ஒத்துழைப்பு உண்டாகும்.
கும்பம்
உணர்ச்சிவசப்பட்டு செயல்படுவதைக் குறைத்துக் கொள்ளவும். முன்கோபத்தால் சிலரிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். எதிலும் பகுத்தறிந்து செயல்படவும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் தோன்றி மறையும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தாமதமாகும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் சில அலைச்சல்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : வடக்கு
- அதிர்ஷ்ட எண் : 4
- அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
சதயம் : பகுத்தறிந்து செயல்படவும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
மீனம்
திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்கள் நன்மையைத் தரும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். உடலில் ஒருவிதமான அசதிகள் ஏற்பட்டு நீங்கும். தனம் நிறைந்த நாள்.
- அதிர்ஷ்ட திசை : மேற்கு
- அதிர்ஷ்ட எண் : 8
- அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : நன்மையான நாள்.
உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.
ரேவதி : அசதிகள் நீங்கும்.













No comments
Thank you for your comments