Breaking News

வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம் அறிவிப்பு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 04 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், 2024ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

மேலும் வாக்காளர்கள் இணைய வழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/ என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line”என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண்:1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

மேற்படி இணைய வழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள், வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அனைத்து தினங்களிலும் 09-12-2023 வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்களிலும் அளிக்கலாம்.

மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும், 04-11-2023, 05-11-2023, 18-11-2023 மற்றும் 19-11-2023 ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

எனவே, பொதுமக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சரிபார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


No comments

Thank you for your comments