மழை வடிநீர் கால்வாய்களை மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு
இன்று (03.11.2023) காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மேட்டுத் தெரு சந்திப்பில் பார்வையிட்டு, மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கவும், மேலும் சந்தைவெளி அம்மன் கோயில் அருகே உள்ள மழை வடிநீர் கால்வாயை பார்வையிட்டு, கால்வாயில் மழைநீர் சீராக செல்வதற்கு கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
காஞ்சிபுரம் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகத்தை பார்வையிட்டு, மழை காலங்களில் மழை வெள்ளத் தடுப்புப் பணிக்காக வைக்கப்பட்டுள்ள மணல் மூட்டைகளை பார்வையிட்டு, சாலை பயன்பாட்டாளர்களுக்கு உதவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு தகவல் வாகனத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்பு ஒலிமுகமதுபேட்டை சந்திப்பில் மழைநீர் தேங்காமல் இருக்க சிறு பாலம் அமைக்க அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தேனாம்பாக்கம் பகுதியில் உள்ள மழை வடிநீர் கால்வாயை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்கள்.
இவ் ஆய்வின் போது காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையாளர் திரு.செந்தில் முருகன், நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் திரு.பெரியண்ணன், மாநகராட்சி பொறியாளர் திரு.கணேசன் மற்றும் மாநகராட்சி நெடுஞ்சாலைத் துறை பொறியாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.
No comments
Thank you for your comments