Breaking News

ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஜீர்னோதாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா.

காஞ்சிபுரம், நவ.3-

காஞ்சிபுரம் அடுத்த   கீழ்ஒட்டிவாக்கம் கிராமத்தில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ கங்கையம்மன், ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஜீரண தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. 


இதில் சிறப்பு யாகசாலை பூஜை நடைபெற்ற மகாதீபாரதனையும் நடைபெற்றது தொடர்ந்து கலச புறப்பாடு நடைபெற்ற ஸ்ரீ கங்கை அம்மன் ஸ்ரீ வலம்புரி சக்தி விநாயகர் மகா மாரியம்மன் கோபுர விமானம் மூலவர் மற்றும் பரிவார மூதிகளுக்கு மகா கும்பாபிஷேகம் தீபாரதனை விமர்சையாக நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது விழா ஏற்பாடுகளை ஆலய நிர்வாகி செந்தமிழ் செல்வன் தலைமையில் நிர்வாகிகள் சிங்காரம், பாஸ்கர், பார்த்திபன், மாணிக்கவேல், நாகராஜன், அறிவழகன் ஆகியோர் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.

முன்னதாக மாணவ மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் விமர்சையாக நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளின் பேரருளை பெற்று சென்றனர்..

No comments

Thank you for your comments