போதைபொருள் பயன்படுத்தல் தவிர்த்தல் குறித்த விழிப்புணர்வு பேரணி
தமிழகத்தில் கலந்த சில வருடங்களாகவே மாணவர்கள் இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே போதைப் பழக்கங்கள் அதிகரித்து இதனால் பல்வேறு சட்டம் ஒழுங்கு மற்றும் குடும்ப பிரச்சினைகள் அதிகரித்து நிலவுகிறது.
குறிப்பாக தமிழகத்தில் அரசு தடை செய்த போதை பொருட்களை விற்பனை செய்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அறிவுத்தல் மேற்கொள்ளப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவர்கள் கல்லூரி இளைஞர்கள் இவர்களை குறி வைத்து போதை பொருட்கள் விற்பனை செய்பவரை காவல் துறை அவ்வப்போது ஆய்வு மேற்கொண்டு அதனை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் குறித்து பல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணிகளும் நிகழ்ச்சிகளும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.
அவ்வகையில் காஞ்சிபுரம் மாவட்டம் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை சார்பில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு குறு நாடகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணியை சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் இணைந்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி மூங்கில் மண்டபம் வரை இந்த பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு போதையில்லா தமிழகத்தை உருவாக்குவோம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றனர்.
மேலும் போதைகளினால் ஏற்படும் தீமைகள் மற்றும் உறவினர்கள், குடும்பத்திற்கு ஏற்படும் நீங்கா அவபெயரை ஏற்படுவதாக கோஷங்கள் எழுப்பி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி ஊர்வலமாக சென்றனர்.




No comments
Thank you for your comments