காஞ்சி : வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் ராயல் என்பில்டு பைக் திருட்டு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே வேதாச்சலம் நகர் நேதாஜி தெருவில், வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள் மற்றும் ராயல் என்பில்டு இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காஞ்சி தாலுக்கா போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த வேதாச்சலம் நகர் அருகே நேதாஜி தெருவில் அஸ்வின் ஜெனிபர் தம்பதியர் வசித்த வருகின்றனர்.
அஸ்வின் மற்றும் ஜெனிபர் காஞ்சிபுரம் அடுத்த காரை கிராமத்தில் உள்ள ஜெனிபரின் தாய் வீட்டிற்கு சென்றிருந்தனர்.
இந்நிலையில் வீடு பூட்டபட்டு இருந்ததை கண்ட மர்ம நபர்கள் நேற்று இரவு வீட்டின் முன் பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி கொலுசுகள் மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த ராயல் என்பீல்ட் இரு சக்கர வாகன திருடி சென்றுள்ளனர்.
அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் வந்த ஜெனிபர் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக கொள்ளை சம்பவம் குறித்து காஞ்சி தாலுகா போலிசார் தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் வந்த போலிசார் கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



No comments
Thank you for your comments