பாலாற்றில் மணல் லிங்கம் வடிவமைத்து வழிபட்ட சிவனடியார்கள்
காஞ்சிபுரம், நவ.17:
ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முதல் தேதி காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றங்கரையில் முடவன் முழுக்கு திருவிழா ஸ்ரீதிருஞானசம்பந்தர் இறைப்பணி மற்றும் உழவாரப்பணி அறக்கட்டளை சார்பில் கொண்டாடப் பட்டு வருகிறது.
முடவன் ஒருவருக்கு சிவனும், பார்வதியும் ரிஷபவாகனத்தில் காட்சி கொடுத்த கார்த்திகை மாத முதல் நாளே முடவன் முழுக்கு திருவிழாவாக நடந்து வருகிறது.
இவ்விழாவையொட்டி பாலாற்றங்கரையில் அறக்கட்டளை சார்பில் காஞ்சிபுரம் அருகே மாகரல் கிராமத்தில் அருள்பாலித்து வரும் திருமாகரலீசுவரர் அலங்காரத்தில் சிவனும், திருபுவன நாயகியும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.மேலும் மாகரல் ஆலய மூலவரைப் போன்று உடும்பீசுவரர் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து அலங்காரமும், தீபாராதனைகளும் நடைபெற்றன. சிறப்பு பூஜைகளை காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் ஸ்தானீகர் இ.ரவிச்சந்திர குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடத்தினார்கள்.
மேல்மருவத்தூர் சொற்பொழிவாளர் சக்தி.பு.கந்தனின் ஆன்மீகச் சொற்பொழிவும் நடைபெற்றது.
இதனையொட்டி பாலாற்றங்கரையில் 100க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மணலில் விங்கம் வடிவமைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.ஏற்பாடுகளை அறக்கட்டளையின் தலைவர் ஜெ.கவியரசு தலைமையிலான குழுவினர் செய்திருந்தனர்.
படவிளக்கம்}பாலாற்றங்கரையில் சிறப்பு அலங்காரத்தில் மாகரலீசுவரர் மற்றும் திருபுவன நாயகி(நடுவில்)மூலவரைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்த உடும்பீசுவரர்



No comments
Thank you for your comments