Breaking News

காஞ்சிபுரத்தில் தேசிய இளைஞர் தின விழா

காஞ்சிபுரம், நவ.18:

காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் அத்வைதம் அரங்கில் மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.


சென்னை பல்கலைக்கழகமும், காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமும் இணைந்து மாவட்ட அளவிலான தேசிய இளைஞர் தின விழாவையொட்டி பல்வேறு போட்டிகளை நடத்தினார்கள். 

போட்டிகளை சங்கரா கல்லூரி முதல்வர் கே.ஆர்.வெங்கடேசன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார்.கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் சுரேஷ்குமார் முன்னிலை வகித்தார்.தமிழ்த்துறைப் பேராசிரியர் கணபதி வரவேற்றார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் மாவட்டம் முழுவதும் உள்ள கல்லூரிகளிலிருந்து ஏராளமான இளைஞர்கள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.தனி மற்றும் குழு நடனம்,பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, சிறந்த புகைப்படப்போட்டி,கதை எழுதும் போட்டி உட்பட 8 விதமான போட்டிகள் நடைபெற்றன.

படவிளக்கம் : தேசிய இளைஞர் தின விழாவையொட்டி காஞ்சிபுரம் சங்கரா கல்லூரியில் நடைபெற்ற குழு நடனப் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவியர்கள்.

No comments

Thank you for your comments