Breaking News

ஊழல் மன்னன் துரைமுருகன் மட்டும்தான் காரணம் - நான் சந்திக்க தயார்... குடியாத்தம் குமரன் சாடல்

வேலூர், நவ.22-




தி.மு.க. கொள்கை பரப்பு துணை செயலாளர் குடியாத்தம் குமரன். தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என சரளமாக மேடையில் பேசுவார். வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகனின் தீவிர ஆதரவாளராக தன்னை அடையாளம் காட்டிக்கொண்டிருந்தார். கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக அவர் தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நீக்கம்

இது தொடர்பாக தி.மு.க பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

கழக கொள்கைப் பரப்பு துணைச்செயலாளர் குடியாத்தம் குமரன், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி வைக்கப்படுகிறார் எனக் கூறியுள்ளார்.

2-வ முறையாக

இதே போல ஏற்கனவே ஒருமுறை குடியாத்தம் குமரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் மீண்டும் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டார். 

2-வது முறையாக குடியாத்தம் குமரன் நீக்கப்பட்டிருப்பது வேலூர் மாவட்ட தி.மு.க.வினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து குடியாத்தம் குமரன் தனது சமூக முகநூல் பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ளதாவது, 

எனது நீக்கத்தை குறித்து தலைவர் தளபதி அவர்களையோ கட்சியோ யாரும் விமர்சிக்க வேண்டாம் கட்சியின் துரோகி ஊழல் மன்னன் துரைமுருகன் மட்டும்தான் காரணம் இதை நான் சந்திக்க தயார். இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

வீடியோ

இது குறித்து தி.மு.க.வினர் கூறுகையில்:- 

குடியாத்தம் குமரன் சமூக வலைதளங்களில் எதிர்கட்சிகளை அவதூறாக பேசி வந்தார். கட்சி கட்டுப்பாடுகளை மீறியதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

குடியாத்தம் குமரன் தி.மு.க.வுக்கு ஆதரவாக சமூகவலைத்தளங்களில் பேசி வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 

பிரதமர் குறித்து விமர்சனம்

அ.தி.மு.க. நிர்வாகி விந்தியா குறித்து குடியாத்தம் குமரன் பேசிய சர்ச்சைக்குரிய வீடியோ குறித்து நடவடிக்கை எடுக்க கோரி தேசிய மகளிர் ஆணையம் பரிந்துரை செய்து இருந்தது. இதனிடையே இந்த புகாரில் அவருக்கு ஜாமீனும் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வி அடைந்ததற்கான காரணம் குறித்து குடியாதம் குமரன் பேசி வெளியிட்டு இருந்த வீடியோவில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்து பேசிருந்தார்.


 



No comments

Thank you for your comments