Breaking News

பல்வேறு பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் சபாநாயகர் அப்பாவு

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சட்டமன்ற நாயகர்-கலைஞர் அவர்களின் சட்டமன்ற சாதனைகள் குறித்த, மாவட்ட அளவிலான  பல்வேறு பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

இன்று (21.11.2023) காஞ்சிபுரம் பச்சையப்பன் மற்றும் அந்திரசன் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற, முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சட்டமன்ற                       நாயகர்-கலைஞர் அவர்களின் சட்டமன்ற சாதனைகள் குறித்த மாவட்ட அளவிலான பல்வேறு பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் திரு.மு.அப்பாவு அவர்கள் பரிசுகளை வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதல்படி, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு அக்டோபர் 2023 மாதம் பள்ளி இலக்கிய மன்ற செயல்பாடுகளின் ஒரு பகுதியாக சட்டமன்ற நாயகர் கலைஞர் அவர்களின்  சட்டமன்ற சாதனைகள் குறித்த சொற்பொழிவுப் போட்டிகள்  அனைத்து வகைப் பள்ளிகளிலும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.


இதன்மூலம் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள், சட்டமன்றத்தில்  ஆற்றிய உரைகளில் சமூக நீதி, சமத்துவம், மொழி உரிமை, மகளிர் முன்னேற்றம், மக்கள் நலத்திட்டங்கள், முற்போக்கு சிந்தனை வெளிப்பாடு என பன்முக செயல்பாடுகளை மேற்கொண்டது குறித்து இன்றைய மாணவச் சமூகத்தினர்  அறிந்து கொள்ள முடிந்தது. பள்ளியில் பயிலும்போதே  இச்செயல்பாடுகளை மாணவச் சமூகத்தினர் அறிந்து கொள்வது அவர்களின் திறன்களை மேம்படுத்திக்கொள்ள உதவுவதுடன் சமுக மனப்பான்மை வளர மிகவும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாவட்ட அளவிலான போட்டிகள், காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப்பள்ளியிலும், அந்திரசன் மேல்நிலைப் பள்ளியிலும் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

இவ்விழாவில் சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் திரு. சா. பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கலைச்செல்வி மோகன்,இ.ஆ.ப., அவர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. க.செல்வம் அவர்கள், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.சுந்தர் அவர்கள், சட்டப்பேரவை செயலர் முனைவர். கி. சீனிவாசன் அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.வெங்கடேஷ்,  காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் திருமதி. மகாலட்சுமி யுவராஜ் அவர்கள், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் திருமதி.ச.ரம்யா, முதன்மை கல்வி அலுவலர் திருமதி.V.வெற்றிச்செல்வி அவர்கள், சட்டப்பேரவை இணை செயலர் திருமதி.R.சாந்தி அவர்கள், சட்டப்பேரவை இணை செயலர் திருமதி.S.ஆண்டாள் அவர்கள், சட்டப்பேரவை துணை செயலர்                  திரு.K.ரமேஷ் அவர்கள், சட்டப்பேரவை தலைமை நிருபர் திருமதி.R.மலர்விழி அவர்கள், மாவட்ட உள்ளாட்சி மன்ற பிரிதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

வெளியீடு: செய்தி மக்கள் தொடர்பு அலுவலர், காஞ்சிபுரம் மாவட்டம்.          

No comments

Thank you for your comments