Breaking News

சனாதனம் என்பது அனைத்து உயிர்களையு்ம் ஒற்றுமையாக பார்ப்பதே - தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு.

காஞ்சிபுரம், நவ.7 :

மனிதர்கள், விலங்குகள், தாவங்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களையும் ஒற்றுமையாக பார்ப்பதே சனாதனம் என்று காஞ்சிபுரத்தில் சங்கரா கல்லூயில் செவ்வாய்க்கிழமை நடந்த பட்டமளிப்பு விழால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.


காஞ்சிபுரம் அருகே ஏனாத்தூரில் அமைந்துள்ள சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா அக்கல்லூரியில் உள்ள காஞ்சி மகாசுவாமிகள் கலையரங்கத்தில் நடைபெற்றது.கல்லூரி முதல்வர் கே.ஆர். வெங்கடேசன் தலைமை வகித்தும் வரவேற்றும் பேசினார்.

கல்லூரியின் செயலாளர் வி.பி.ரிஷிகேஷன்,தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் என்.பஞ்சநாதன்,தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் நவீன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்,பதக்கம் மற்றும் பட்டங்களை வழங்கி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது..

பட்டம் பெற்றுள்ள இளைஞர்கள் ஒவ்வொருவரும் பெரிதாக கனவு காண வேண்டும்,அந்தக்கனவு நிறைவேற கடினமாக உழைக்க வேண்டும், தன்னம்பிக்கையுடன் எப்போதும் செயல்பட வேண்டும், எதிர்மறை எண்ணங்களை மனதில் நுழைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்,

நம் சொத்து இந்தியா என்பதை ஒவ்வொரு மாணவரும் உணர்ந்து அதன் முன்னேற்றத்திற்காக பாடுபட வேண்டும்.கரோனோ நோய்த்தொற்றுக் காலத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்து அதை150 நாடுகளுக்கு விநியோகித்தோம்.100 நாடுகளுக்கு இலவசமாகவே கொடுத்தோம்.

இதற்காக இந்திய விஞ்ஞானிகளுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.இப்படிப்பட்ட பெருமைக்குரிய இந்தியாவில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

விண்ணிலும், மண்ணிலும் நமது பாரதம் பல்வேறு சாதனைகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறது. ஜி.20 மாநாட்டினை நடத்தி உலகத்துக்கே இந்தியா விஸ்வகுருவாக விளங்கியிருக்கிறது. 

பொருளாதாரத்தில் 3 வது இடத்துக்கு முன்னேறியிருக்கிறது நமது பாரதம்.அதே போல டிஜிட்டல் துறையில் நமது பாரதம் ஒரு புரட்சியே செய்து கொண்டிருக்கிறது.

புதிய இந்தியாவை, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்கிய பெருமை நமது பாரதப் பிரதமரையே சேரும். அதற்காக பாரதப்பிரதமருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும், சனாதனம் என்பது மரபு சார்ந்த பாரம்பரிய வழியாகும்.

அது மனிதர்கள்,விலங்குகள்,தாவரங்கள் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களையும் ஒன்றாகப் பார்க்கிறது.நீண்டா கால சமூதாய மரபுகளே சனாதனம். 

ஆதிசங்கரர்,குருநானக், போதி தர்மர்,வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார், திருவள்ளுவர் உட்பட பல மகான்களும் சனாதன தர்மத்தை வலியுறுத்தியிருப்பதாகவும் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசினார்.

பட்டமளிப்பு விழாவில் காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச ஐயர்,சென்னை வைஷ்ணவா கல்லூரியின் முன்னாள் முதல்வர் லலிதா பாலகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.விழாவில் பல்வேறு பாடப் பிரிவுகளைச் சேர்ந்த 1637 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

முன்னதாக கல்லூரி வளாகத்தில் ரூ.ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நோய் கண்டறிதல் ஆராய்ச்சி மையத்தையும் ஆளுநர் திறந்து வைத்தார்.

No comments

Thank you for your comments