மனைவியை கொலை செய்த கணவனுக்கு ஆயுள் தண்டனை- மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
- ஸ்ரீபெரும்புதூர் அருகே மனைவியை கொலை செய்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை மற்றும்
- ரூ.10,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பு
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேவலூர் குப்பத்தைச் சேர்ந்தவர் குமரேசன்(41) இவர் கடந்த 19.11.2014 அன்று மதுபோதையில் தனது மனைவி மாரியம்மாளை கழுத்தை நெரித்து கொலை செய்தது சம்மந்தமாக அப்போதைய ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் திரு.பாலு வழக்கு பதிவு செய்து. குமரேசனை கைது செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார். பின்னர் இவ்வழக்கின் நீதிமன்ற விசாரணை செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
மேற்படி வழக்கில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.M.சுதாகர் உத்தரவின்பேரில, ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு.பரந்தாமன், செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற அரசு வழக்கறிஞர் திருமதி.செல்வி.S.சசிரேகா. ஆகியோர் இவ்வழக்கில் தனிக்கவனம் செலுத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று (07.11.2023), மேற்படி வழக்கின் வாதம் நிறைவடைந்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி M.எழிலரசி அவர்கள் மேற்படி குமரேசனை குற்றவாளி என உறுதிசெய்து ஆயுள் தண்டனையும், ரூபாய் 10,000 அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கினார்.
மேலும், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டணை பெற்றுதர சிறப்பாக புலன் விசாரணை மேற்கொண்ட காவல் ஆய்வாளர், நீதிமன்ற விசாரணை பணிகளை மேற்கொண்ட ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலரை காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்.
மனைவியை கொலை செய்த வழக்கில் கணவனுக்கு 9 வருடங்களுக்கு பிறகு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


No comments
Thank you for your comments