தோல்வியை கண்டு துவளாதீர்கள் - மாணவ - மாணவிகளுக்கு ஊக்கம் அளித்த நடிகை
30க்கும் மேற்பட்ட பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை விழாவில் திரைப்பட நடிகை கலந்து கொண்டு பரிசு வழங்கினார். மேலும் தோல்வியை கண்டு துவளாதீர்கள் மாணவ மாணவிகளுக்கு என ஊக்கம் அளித் து பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பழையசீவரம் எம்சிஏ தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இருபதாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கலை விழா போட்டிகள் நடைபெற்றது.
இதில் 30க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தினார்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், அதிக போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளிக்கும் பரிசுகளும், கேடயமும், சான்றிதழும் திரைப்பட நடிகை பிரிகிடா சகா வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் எந்த விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாதீர்கள், படிப்பையும் சீரியஸா எடுத்துக் கொள்ளாதீர்கள், தோல்வியை கண்டு துவள வேண்டாம் என்று ஆலோசனை வழங்கினார்.
இந்த விழாவானது அந்தப் பள்ளியின் தாளாளர் டாக்டர் அந்தோணிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் ஜெய்சங்கர், வாலாஜாபாத் டவுன் பஞ்சாயத்து கவுன்சிலர் டாக்டர் லயன் வெங்கடேசன் மற்றும் பள்ளியின் நிர்வாகிகள் மாணவ, மாணவிகள் பொதுமக்கள் என ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments