மத்திய அரசின் தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ரூ.1.40 லட்சம் சம்பளம்
மத்திய அரசின் தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி பொறுப்பில் காலியாக உள்ள பணியிடங்களை நிறுவனத்துக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரையிலான சம்பவளம் வழங்கப்பட உள்ளது
மத்திய அரசின் உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் தேசிய உர லிமிடெட் (National Fertilizers limited) நிறுவனம் செயல்பட்டு வருகிறது. உத்தர பிரதேச மாநிலம் கவுதம் புத் நகர் மாவட்டத்தில் இந்த நிறுவனம் அமைந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் அமோனியா-யூரியா பிளாண்டுகள் 5 உள்ளன. அதன்படி பஞ்சாப் மாநிலம் நங்கல், பதிண்டா, ஹரியானா மாநிலம் பாணிபட், மத்திய பிரதேச மாநிலம் குனா மாவட்டம் விஜைபூரில் 2 பிளாண்டுகள் உள்ளன. இங்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மார்க்கெட்டிங் பணி :
தேசிய உர லிமிடெட் நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெய்னி (மார்க்கெட்டிங்) பணிக்கு மொத்தம் 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். விண்ணப்பம் செய்ய விரும்புவோர் MBA/PGDBM/PGDM-ல் மார்க்கெட்டிங், அக்ரி பிசினஸ் மார்க்கெட்டிங், ரூரல் மேனேஜ்மென்ட், பாரின் டிரெட்/இன்டர்நேஷனல் மார்க்கெட்டிங் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எம்எஸ்சி (அக்ரிகல்சர்) பிரிவில் சீட் சயின்ஸ் அன்ட் டெக், ஜெனிடிக்ஸ் அன்ட் பிளன்ட் பிரிடிங், அக்ரோனாமி, சாயில் சயின்ஸ், அக்ரிகல்சர் கெமிஸ்ட்ரி, என்டோமோலாஜி, பாதோலாஜி படிப்புகளை முடித்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
எப் அண்ட் ஏ பணி :
மேனேஜ்மெண்ட் டிரெய்னி (எப் அண்ட் ஏ) பணிக்கு 10 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளங்கலை பட்டப்படிப்பை முடித்து சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎம்ஆர் படிப்புகளை முடித்திருக்க வேண்டும். இந்த பணிக்கும் மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை ஊதியம் வழங்கப்படும்.
சட்ட பணி :
மேலும் மேனேஜ்மென்ட் டிரெய்னி (சட்டம்) பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு சட்டப்படிப்பை 60 சதவீத மதிப்பெண்களுடன் முடி்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.40 ஆயிரம் முதல் ரூ.1.40 லட்சம் வரை வழங்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்வோர் குறைந்தபட்சம் 18 வயதும், அதிகபட்சமாக 27 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவை சேர்ந்தவர் என்றால் 5 வயது வரையும், ஓபிசி பிரிவினர் என்றால் 3 வயது வரையும், பிடபிள்யூடி பிரிவினர் என்றால் 10 முதல் 15 வரையும் வயது தளர்வு வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
விண்ணப்ப கட்டணமாக ரூ.700 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, பிடபிள்யூபிஇ உள்ளிட்டவர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. இவ்வாறு விண்ணப்பம் செய்வோர் ஓஎம்ஆர் தேர்வு, நேர்க்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் www.nationalfertilizer.com இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்ய டிசம்பர் மாதம் 1ம் தேதி கடைசி நாளாகும். இந்த பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு முதலில் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்கு பிறகு குறைந்தபட்சம் 3 ஆண்டு பணியாற்றுவதற்கான ‛அக்ரிமெண்ட் பாண்ட்' செய்யப்படும்.
Click here அதிகாரப்பூர்வ இணையதளம்
Click here அதிகாரப்பூர்வ அறிவிப்பு PDF File
Apply Now பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய
Management Trainee (Marketing) Apply Now
Management Trainee (F&A) Apply Now
Management Trainee (Law) Apply Now


  
No comments
Thank you for your comments