Breaking News

நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் திரும்ப பெற எஃப் ஐ ஆர் நகல் எரிப்பு போராட்டம்

 நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது போடப்பட்ட தேச துரோக வழக்கில் திரும்ப பெற எஃப் ஐ ஆர் நகல் எரிப்பு போராட்டம் காஞ்சிபுரம் மாவட்ட ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்றன.



காஞ்சிபுரம் மாவட்டம் பெரியார் தூண் அருகே ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் சாரங்கன் தலைமையில் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட காரணத்திற்காக அந்நிறுவனத்தின் மீது தேச துரோக வழக்கு தொடுத்து எஃப் ஐ ஆர் வழங்கப்பட்டன.

இதில் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் தலைமை நிருபர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும் உடனடியாக விடுதலை செய்யக் கோரியம் பத்திரிகை ஜனநாயகத்தை, சுதந்திரத்தை பறிபோகாமல் காத்திடவும் ஜனநாயகத்தின் நான்காவது தூணாக கருதப்படும் பத்திரிக்கை சுதந்திரம் ஒரு சாரராக முடக்குவதோ அதிகாரம் செலுத்துவதோ செய்தால் மக்களின் ஜனநாயகம் பெரிதும் பாதிப்பு உள்ளாக நேரிடும் எனவே பத்திரிகை ஜனநாயகம் சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்றும் அவ்வாறு விவசாயிகளுக்கு ஆதரவாக நியூஸ் கிளிக் நிறுவனம் செயல்பட்டதால் தேச துரோக வழக்கு என்பது கண்டனத்திற்குரியதாகவும் ஆளும் பாஜக அரசு இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதால் ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கம் மாபெரும் கண்டனத்தை தெரிவிக்கும் வகையில் அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட எஃப் ஐ ஆர் நகலை தீயிட்டு எரிக்கும் போராட்டம் நடைபெற்றன.

போராட்டத்தில் 20கும் மேற்பட்ட காவல்துறையினர் ஈடுபட்டு எஃப் ஐ ஆர் நகல் எரிக்கப்படுவதை தடுக்கப்பட்டு அனைத்து பிரதிகளையும் ஐக்கிய முன்னணி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கலந்து கொண்ட உறுப்பினர்களிடமிருந்து பறிக்கப்பட்டு காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தனது கண்டனத்தை தெரிவித்து கலைந்து சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட விவசாயிகள் சங்கம் மாவட்ட செயலாளர் நேரு, சிபிஐ மாவட்ட செயலாளர் மூர்த்தி, AIKS நந்தகோபால், TNTA நிர்வாகிகள் முருகேசன்,  செல்வம் சீனிவாசன் ஆனந்தன் சுகுமார் பன்னீர்செல்வம் வேணுகோபால் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments

Thank you for your comments