00 நாள் வேலையை முடக்க சதி திட்டம் - தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாற்றும் விவசாயிகளுக்கு மூன்று மாதம் சம்பளம் பாக்கி மற்றும் 100 நாள் வேலையை முடக்க சதி திட்டம் செய்யும் பாஜக ஒன்றிய மோடி அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் லாரன்ஸ் தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பாஜக ஒன்றிய மோடி அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு பணியாற்றும் விவசாயிகளுக்கு மூன்று மாத காலமாக சம்பளம் வழங்காமல் இருக்கும் ஒன்றிய அரசை எதிர்த்து சம்பளத்தை வழங்கும்போது சட்டப்படி இழப்பீடு தொகையுடன் சேர்த்து வழங்க வேண்டும் என்றும்,
ஒன்றிய அரசு அறிவித்தபடி சட்டப்படி 15 நாட்களுக்குள் தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி புரியும் விவசாயிகளுக்கு சம்பளம் வழங்கப்படுவதை உறுதிசெய்து முழு ஒருநாள் கூலியான 293 ரூபாய் வழங்க வேண்டும் என்றும்,
வருங்காலத்தில் ஆண்டுக்கு 200 நாட்கள் வேலையும் ஒருநாளைக்கு 600 ரூபாய் சம்பளமும் வழங்கிட வேண்டும் என்றும் நாடு முழுவதும் 100 நாள் வேலைக்கு குறைந்தபட்சம் மூன்று லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திடவும் பண்டிகை காலம் நெருங்குவதால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
இதில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மூர்த்தி, சீனிவாசன், சங்கர், தங்கராஜ், கமலநாதன், வடிவுக்கரசி ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.



No comments
Thank you for your comments