Breaking News

பயணிகள் ரெயிலில் சிலிண்டர்கள் ஏற்றும் அதிர்ச்சி காட்சி வெளியாகி பரபரப்பு

  • காஞ்சிபுரம் புதிய இரயில்வே நிலையத்திலிருந்து பயணிகள் ரெயிலில் சிலிண்டர்கள் ஏற்றும் அதிர்ச்சி காட்சி வெளியாகி பரபரப்பு
  • பாதுகாப்பு குறைபாடு காரணமாக பயணிகள் இரயிலில் சிலிண்டர்கள் எடுத்து செல்லப்பட்டதால் இரயில் பயணிகள் அச்சம்
  • மதுரையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் வெடித்து 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த கோர சம்பவம் நிகழ்ந்து அதன் நினைவுகள் கூட மனதை விட்டு மறையாத நிலையில் அதிகாரிகள் அலட்சியம்


காஞ்சிபுரத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை தாம்பரம் போலீச பல்வேறு இடங்களில் தங்களது பணி நிமித்தமாக சென்று வருகின்றனர்.அதேபோல் சிலர் தங்களது தேவைக்காகவும் திருத்தணி,திருப்பதி போன்ற இடங்களுக்கு பிரயாணங்களும் செய்து வருகின்றனர்.

இந்த நிலையிலே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு விடியற்காலை வேலையில் காஞ்சிபுரம் புதிய ரயில்வே நிலையத்தில் இருந்து ரயில்பெட்டியில் தொழிற்சாலைகளில் பயன்படுத்தக்கூடிய சிலிண்டர் மற்றும் வீட்டிற்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றை ரயிலில் ஏற்றி கொண்டு செல்வதற்காக நடைமேடையில் கொண்டு வந்து ரயிலில் ஏற்றியிருக்கின்றனர்.

அப்போது அங்கிருந்த ஒருவர் இதனை வீடியோ காட்சி பதிவு செய்த நிலையில் இதனை கண்ட அவர்கள் ரயிலில் ஏற்றுவதை நிறுத்திவிட்டு மீண்டும் அவற்றை இறக்கி அவரிடம் வீடியோ எடுக்க கூடாது எனவும் அறிவுறுத்தியிருக்கின்றனர்.

இதனையெடுத்து அந்த சிலிண்டர்கள் இரயிலில் ஏற்றி எடுத்து சென்றிருக்கின்றனர்.ஏற்கனவே கடந்த ஆகஸ்ட் மாதம் லக்னோவில் இருந்து ஆன்மீக சுற்றுலா பயணமாக 60க்கும் மேற்பட்டோர் மதுரை வந்திருந்த நிலையிலே சிலிண்டர் வெடித்து விபத்தானது ஏற்பட்டு பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது.இந்த நிலையிலே ரயில்களில் விதிமுறைகளை மீறி சிலிண்டர்கள் எடுத்துச் செல்வது சட்டப்படி குற்றம் என்கின்ற நிலையில் இவர்கள் எப்படி இரயில் நிலையத்திற்கு சிலிண்டரை கொண்டு வந்தனர்? எப்படி சிலிண்டருடன் வந்தவர்கள் இரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர்? இதனை இரயில்வே துறையினர் கவனிக்க தவறிவது ஏன் ? அனுமதியுடன் எடுத்து செல்லப்பட்டிருந்தால் ஏன் ஏற்றி இரயிலில் ஏற்றிய சிலிண்டர் வீடியோ பதிவு செய்யும் போது இறக்கினர் ? பயணிகள் இரயிலில் சிலிண்டர் ஏற்ற அனுமதித்தது யார்? அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? எனும் அடுக்கடுக்கான கேள்விகள் எழுந்திருக்கிறது.இரயில் நிலையத்தில் பாதுகாப்பு குறைபாடு காரணமாக சிலிண்டர்கள் ஏற்றப்பட்டதால் இரயிலில் பயணித்தவர்கள் அச்சத்துடன் செல்ல நேரிட்டது.

இது குறித்து தென்னக ரெயில்வே நிர்வாகம் இதற்கெல்லாம் விளக்கம் அளித்து சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பதே இரயில் பயணிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது‌.

No comments

Thank you for your comments