காஞ்சிபுரத்தில் புற்றுநோய் விழிப்புணர்வு வாகனம் - ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்
காஞ்சிபுரம், நவ.3:
காஞ்சிபுரம் பழைய ரயில் நிலைய சாலையில் அரசு அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் ஆராய்ச்சி மையம் செயல்பட்டு வருகிறது.இம்மையத்தின் சார்பில் புற்றுநோய் கண்டறிதல் விழிப்புணர்வு வாகனம் தொடக்க விழா நடைபெற்றது.
வாகனத்தை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன் கொடியசைத்து தொடக்கி வைத்தார். காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், எம்எல்ஏ எழிலரசன், மேயர்.எம்.மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் எஸ்.சரவணன் அனைவரையும் வரவேற்று பேசினார்.புற்று நோய் மருத்துவமனையின் நிலைய மருத்துவ அலுவலர் ப.சிவகாமி நன்றி கூறினார்.
விழாவில் புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்கள்,மருத்துவர்கள்,செவிலியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.விழாவில் பங்கேற்ற ஆட்சியர் கலைச்செல்வி மோகன் பேசுகையில் 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் 37603 பேருக்கு பல்வேறு முகாம்கள் மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில் 1260 பேருக்கு புற்றுநோய் இருப்பதாக உறுதி செய்யப்பட்டு சிகிச்சை செய்து கொள்ள பரிந்துரைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
No comments
Thank you for your comments