காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழை - வாகன ஓட்டிகள் அவதி
காஞ்சிபுரம் :
- காஞ்சிபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை.
- சாலையில் சென்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி, வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்நிலையில் காலை முதலே காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயில் காய்ந்து வந்த நிலையில் மதிய நேரத்தில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து பயங்கர இடி சத்தத்துடன் கனமழை பெய்ய தொடங்கியது.
காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதிகள், ஓரிக்கை, தேனம்பாக்கம், செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, பெரியார் நகர், சென்னை பெங்களூர் பேசிய நெடுஞ்சாலை, காரை, வையாவூர், நத்தப்பேட்டை, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் ஒரு மணி நேரமாக கனமழை பெய்து வருகிறது.
திடீர் மழையின் காரணமாக சாலையில் சென்ற வாகன ஓட்டிகளும், வெளியில் சென்ற மக்களும் அவதிபட்டாலும்,காலை முதல் வாட்டி வதைத்து வந்த வெப்பம் தணிந்து, குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

.jpg)
No comments
Thank you for your comments