காஞ்சிபுரத்தில் வாசகர் வட்டக் கூட்டம்
காஞ்சிபுரம், நவ.5:
தமிழ்நாடு வாசகர் வட்டம் காஞ்சிபுரம் கிளையின் கூட்டம் காமாட்சி அம்மன் கோயில் அருகில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு வாசகர் வட்டம் காஞ்சிபுரம் கிளையின் கூட்டம் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் ஸ்தானீகர் சி.ஆர். நடராஜ சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்றது.பாஜ கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்க மாநிலத் துணைத் தலைவர் டி.கணேஷ், பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தொழிலதிபர் டி.ஆர். சுப்பிரமணி வரவேற்று பேசினார். காஞ்சியின் மண்வாசம் என்ற தலைப்பில் பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆர்.ரவிச்சந்திரனும்,வடக்கும், தெற்கும் என்ற தலைப்பில் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் எஸ்.சதீஷ்குமாரும் பேசினார்கள்.
காஞ்சிபுரம் ரோட்டரி சங்க தலைவர் வி.கே.ஜெயகரன் அருணகிரிநாதர் என்ற புத்தகத்தின் மதிப்பீட்டுரை நிகழ்த்தினார். நிறைவாக காஞ்சிபுரம் பல்லவன் கல்விக் குழும நிர்வாக இயக்குநர் பி.மோதிலால் நன்றி கூறினார். முன்னதாக கூட்டம் பாடகர் எஸ்.வினோதா அவர்களின் இறைவாழ்த்துடன் தொடங்கியது.
படவிளக்கம் : வாசகர் வட்டக் கூட்டத்தில் காஞ்சியின் மண்வாசனை என்ற தலைப்பில் பேசிய பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஆர்.ரவிச்சந்திரன்

No comments
Thank you for your comments