Breaking News

ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தலைமை காவலர் பணி - ரூ.81,100 சம்பளம் || HEAD CONSTABLE (GENERAL DUTY) AGAINST SPORTS QUOTA- 2023

சி.ஐ.எஸ்.எஃப்.,ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://cisfrectt.cisf.gov.in/ இல் காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.  மொத்தம் 215 காலிப்பணியிடங்களுக்கு, ஆர்வம், தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.  கடைசி தேதி   28.11.2023. 



நிர்வாகம் : மத்திய தொழில் பாதுகாப்பு படை (Central Industrial Security Force) 

பணி விவரம் :  ஹெட் கான்ஸ்டபிள் ( Head CONSTABLE )

விண்ணப்பிக்கும் முறை:  ஆன்லைன் 

காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை:  215 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 28.11.2023 

கல்வி தகுதி  : 

அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தின் வாயிலாக, 10ம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித்தகுதியில் (equivalent education) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக ஏதாவது ஒரு விளையாட்டில் மாநில / தேசிய / சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

ஊதியம் :

தலைமை காவலர் பணிக்கு நிலை-4 படி மாதம் ரூ.25,500 - ரூ.81,100 வரை ஊதியம் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி :

இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி  தேதி 28.11.2023 

வயது வரம்பு  :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது 01.08.2023இன் படி வரம்பு 23க்கு மேலும், 18க்கு கீழும் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு, அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். 

முக்கிய குறிப்பு :   01/01/2021 to 28/11/2023 காலக்கட்டத்தில் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றிருக்க வேண்டும். 

தேர்வு முறை: 

👉 தேர்வு முறை இரண்டு நிலைகளை உள்ளடக்கியது. முதல் நிலையில் உடற்தகுதி தேர்வு, தேர்ச்சி தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் நிலை தேர்வு மேற்கொள்ளப்படும் ( Physical Standard Test/Proficiency, Trail Test) 

👉  இரண்டாம் நிலையில், மருத்துவ பரிசோதனை தேர்வு நடக்கும். 

👉 விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பை பார்வையிடவும். 

👉 விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வாயிலாக மட்டுமே ரூ.100 -ஐ கட்டணமாக செலுத்த வேண்டும். மகளிர், முன்னாள் இராணுவ வீரர்கள், பழங்குடியின/பட்டியலின பிரிவினர் EWS-Economically Backward Class தகுதியுடையோர் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 

👉 தகுதி, ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு சலுகை, இதர கல்வித் தகுதி போன்ற இன்ன பிற முழு விவரங்களை கீழே கொடுக்கப்பட்ட ஆங்கிலம் அறிவிப்புகள் வாயிலாக அறிந்து கொள்ளலாம். 

👉 தேர்வு மையம், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இன்ன பிற அறிவிப்புகள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அவ்வவ்போது வெளியிடப்படும். 

விண்ணப்பிக்கும் முறை :

www.cisfrectt.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் வண்ண பாஸ்போர்ட், தேவையான கல்வி சான்றிதழ், புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும். அது தேர்வு அறிவிப்பு வெளியான தேதியிலிருந்து 3 மாதத்துக்கு மேல் பழையதாக இருக்கக்கூடாது. 

மேலும் விரிவான தகவல்களுக்கு  

https://cisfrectt.cisf.gov.in/ 

https://www.cisf.gov.in/cisfeng/

Click here Notification PDF 


No comments

Thank you for your comments